பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



58

யில்லை. இந்நூல் முழுதும் அடிகளாரின் தமிழ்ப் பணியைப் பலபட விரித்து விளக்குவதாகும். அவர்கள் தோற்றிய கழகங்களே, அடிகளாரின் தமிழ்ப்பணியைப் பறைசாற்றும்.

 அடிகளாரின் தமிழ்ப் பற்றுக்கு மற்றொரு இமாலயச் சான்று உண்டு. 1938-ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டபோது, அடிகளார் இந்தியை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையை யானே பல இடங்களில் - பல சுவர்களில் ஒட்டியுள்ளேன்.
 அடிகளாரின் தமிழ்ப் பணி - பற் று பற்றி இன்னும் ஒன்று சொல்ல வேண்டும். அஃதாவது:-

அரசர் கல்லூரி

 ஒரு காலத்தில் தமிழ்க் கல்விக்கு எனத் தமிழ்க் கல்லூரி இருந்ததில்லை. தஞ்சையைச் சார்ந்த திருவையாற்றில் வடமொழிக் கல்லூரி என்னும் பெயருடன் வடமொழிக் கல்லூரி ஒன்று இருந்தது. அது, தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னரால் நிறுவப்பட்டது. பிற்காலத்தில் அது தஞ்சை மாவட்ட ஆண்மைக் கழகத்தால் (District Board) மேற்பார்வையிட்டு நடத்தப்பெற்றது. அடிகளார் திருவை யாற்றிற்குச் சென்றபோது, அடிகளாரின் வடமொழிப் புலமையையும் அறிந்த அக்கல்லூரியினர். அடிகளாரின் வடமொழிப் புலமையைப் பாராட்டி வடமொழியிலேயே எழுதி ஒரு வரவேற்புரை வழங்கினர். அக்கல்லூரியைப் பற்றிய செய்திகளை யெல்லாம் அடிகளார் அறிந்து கொண்டனர்.
 புலிசை திரும்பியதும், வடமொழி மட்டும் கற்பிக்கும் அந்தக் கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்யவேண்டும் என்ற எண்ணம் பீரிட்டு எழுந்தது. எண்ணத்திற்கு வடிவம் கொடுக்க அடிகளார் விரும்பினார். அடிகளார்பால்