பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

நூல் ஒன்று தொகுத்து வெளியிட்டமை முன் ஒர் இடத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் பட்டத்தவ ராகிய ஞானியர் அடிகளார், இரண்டாம் பட்டத்து ஆசான்மேல் ஞான தேசிக மாலை' எனும் சிறுநூல் ஒன்று இயற்றி யுள்ளார். அதிலிருந்து ஒரு பாடல் வருமாறு:-

 “நின்னருள் துணையால் நீங்கினர் வறுமை
       நீங்கினர் துன்பநோய் பலவும்.
   நின்னருள் துணையால் எய்தினர் செல்வம்
       நேயமும் எய்தினர் பலரும்.
   நின்னருள் கண்டு நீங்கும் அஞ்ஞானம்
       நின்னருள் ஞானமே நல்கும்.
   தன்னிகர் பங்கு முயற்கருள் புலிசைச்
       சண்முக ஞானதே சிகனே"-

என்பது அப்பாடல் அடுத்து அடிகளார் இயற்றிய 'குரு துதி” என்னும் சிறு நூலிலிருந்து மாதிரிக்கு ஒரு பாடல் காண்பாம்.

குருதுதி (வெண்பா)

"உன்னருள் இல்லையேல் உண்ணும் உணவுண்டோ
    உன்னருள் இல்லையேல் ஒதலெங்கே - உன்னருள்
    இவ்வளவும் செய்வித்தும் ஏழை யுணர்ந்திலனே
    பவ்வநேர் தேசிக நீ பார்”.

     அடுத்து, அடிகளார் இயற்றிய 'திலகவதி அம்மையார் துதி என்னும் சிறு நூலிலிருந்து மாதிரிக்கு ஒரு பாடல் நோக்குவோம்.

திலகவதி அம்மையார் துதி (எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

  "கதிதனை அடைய வனந்தனை அடைவர்
      கடலொடு கலந்துமேம் பட்ட