பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

என்பது ஒரு பகுதி. அதன் பொருள் தத்துவத்தைக் கழற்றித் தள்ளுதல் வேண்டும் என்பதே. பிரபுலிங்க லீலையிலும் சிவப்பிரகாசர், மயங்குவதையே இயற்கையாகப் பெற்ற தத்துவங்களையெல்லாம் நீக்கவேண்டும் என்பார் - “தத்துவம் முற்றும் மயங்குவன தள்ளி” என்றனர்.

இக் காலத்தை நாம் வெல்வ தெப்படி? இறைவன் இரக்கம் இயையின் நாம் வெல்லுதல் கூடும். "என்னை இப்பவத்தில் சேரா எடுத்து" என்பது அருணந்தி சிவாசாரியாரது சிவஞான சித்தியார்.

இது அடியார் சொற்பொழிவின் தொடக்கப் பகுதியாகும்,



9. மாணாக்கர் பட்டாளம்

ஞானியார் அடிகளாரிடம் புலிசை அருளகத்திலேயே பாடங் கேட்டவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். அவர் சென்று தங்கிய ஊர்களில் எல்லாம் பாடங்கேட்டவர்கள் பற்பலராவார். அனைவர் பெயர்களையும் திரட்டிச் சொல்லுதல் அரிது. வெளியூர்களில் பாடம் கேட்ட்வர்களை எல்லாம் அறிய முடியாது என்பது மட்டுமன்று; உள்ளுரில் பாடம் கேட்ட நூற்றுக் கணக்கானவர்களையும் இனங்கண்டு இன்னார் - இன்னார் என்று குறிப்பிட இயலாது. ஞானியார் சுவாமிகள் என்னும் ஆழ்ந்து பரந்த நீர் நிலையில் நீர் பருகியும் நீராடியும் பயன்பெற்றோர் ஒரு சிலரை மட்டுமே ஈண்டு குறிப்பிட இயலும்.

திருமுருக கிருபானந்த வாரியார் ஒரு சொற்பொழிவில் தாம் புலிசை ஞானியார் அடிகளாரிடம் பாடம் கேட்டிருப்பதாகக் கூறினார். சென்னை சட்டமன்றத் தலைவரா