பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

என்றும் முடிவு செய்யப்பெற்றது. செயலாற்றப் பொருள் வேண்டுமே. பல ஊர்கட்குச் சென்று பொருளுதவி பெறப் --து. நான் மட்டும் (சுந்தரசண்முகம்) புதுச்சேரியில் சுமார் ஐயாயிரம் உருபா பெற்றுத்தந்தேன். விழா சிறப் புற நடைபெறத் தொடங்கியது.

திருமுருக சிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிக ளார், நீதிபதி எஸ். மகராசன், வ.சுப. மாணிக்கம், டாக்டர் ந. சஞ்சீவி, டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், புலவர் க. கோவிந்தன் முதலிய அறிஞர் பெருமக்கள் பலர் தலைமை தாங்கியும் சொற்பொழிவாற்றியும் விழாவைச் சிறப்பித்தனர்.

விழாவின் ஒரு கூறாக, ஞானியாரின் மாணாக்கர் ஒருவர் இயற்றிய ஒரு நூலின் வெளியீட்டு விழாவும் நடத் துவதெனத் தீர்மானிக்கப்பட்டபடி யான் (சுந்தரசண்முகம்) இயற்றிய 'தமிழ்நூல் தொகுப்புக்கலை” என்னும் நூல் வெளியிடப்பட்டது. மற்றும் புலவர் க. வேல்முருகன் எழுதிய ஞானியார் வரலாற்றுக் குறிப்பு நூலும் அச்சிட்டு வழங்கப் பெற்றது.

சிவத்திரு ஞானியார் செந்தமிழ்க் கல்லூரி அமைப்புக் குழு என்னும் ஒரு குழு அமைக்கப்பெற்றது. கல்லூரி தொடங்கப் பெற்றது. அதன் முதல்வராகப் பேராசிரியர் சிக்கி இராசாக் கண்ணனாரும், பேராசிரியராக ஆ. சிவலிங்கனாரும் அமர்த்தப் பெற்றனர். அந்தக் "அக் குழு இன்றும் இருக்கிறது. ஆனால் கல்லூரி இன்று இல்லை. சென்னைப் பல்கலைக் கழகத்தின் புலவர் கல்லூரி தொடர்பான விதிமுறை மாற்றத்தினாலும் போதிய பொருள் இன்மையாலும் கல்லூரி நடைபெற வில்லை. சில ஆண்டுகள் இயங்கியதோடு கல்லூரி மூடப் பட்டது.