பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

93



தம்பிகரு ணாநிதியும் எம்மோ டுள்ளார்; தலைமகனார் வழியில்தான் செல்லு கின்றார்; வெம்பிஎழும் புலிமறவர் இங்கே வுள்ளார் வீரமகன் வழியில்தான் செல்லு கின்றோம் கும்பியினை வளர்ப்பவர்கள் குரைத்து விட்டால் கொள்கைவழித் தொடராமல் நின்றா போவோம் நம்பிவரும் நல்லவர்கள் இங்கே வுள்ளார்; நம்அண்ணன் அமைத்தவழி தொடர்ந்து செல்வோம். அண்ணாவைப் போற்றுவது கடமை என்றால் அவர்தம்பி கலைஞரையும் போற்ற வேண்டும் ; அண்ணாவைத் தலைவரென ஏற்றுக் கொண்டால் அவர்தம்பி கலைஞரையும் ஏற்க வேண்டும் ; அண்ணாவின் சொல்லெல்லாம் மதிப்ப தென்றால் அவர்தம்பி கலைஞர்மொழி மதிக்க வேண்டும் அண்ணாவின் கொள்கைவழி நடப்ப தென்றால் அவர்தம்பி கலைஞர்வழி நடக்க வேண்டும். அண்ணா பிறந்த நாள் விழா சென்னை 17–9–1978