பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்த கதைப் பாடல்கள் தெருக்கூத்து, மேடை நாடகம் என மெல்ல காலமாற்றத்தால் வடிவ மாற்றம் பெற்று திரைப்படம், தொலைக்காட்சி ஊடகத் தொடர்ச்சியாக இன்றைக்கு கணினி வரைகலைப் படம்(Computer Animation Film) வரை வந்து விட்டது.

எனது தந்தையார் கவிஞர் வயலூர் சண்முகம் அவர்கள் குழந்தை இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடுடையவர். 'சிறுவர்களுக்கு சிறப்பாக எழுதும் ஆற்றல் பெற்றவர்களில் குறிப்பிடத் தக்கவர் என் நண்பர் மகாகவி சண்முகம்!' என்று உவமைக் கவிஞர் சுரதா அவர்களால் பாராட்டப் பெற்றவர்.

இந்த கதைப் பாடல்களின் உள்ளடக்கம், நீதி, ஆகியவை இன்றைக்கும் (எழுதப்பட்ட எழுபதுகளின் கால கட்டத்தை விட!) நமது சமூகத் தேவையாக, சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களாக அமைந்துள்ளன என்பது ஆச்சர்யம்.

நம் தமிழக முதல்வர் 'முத்தமிழறிஞர்' டாக்டர் கலைஞர் அவர்கள், இந்தப் பாடல்கள் எழுதப்பட்ட அதே கால கட்டத்தில், எனது தந்தையாருக்கு நட்பு அடிப்படையில் ஒரு கடிதம்