பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



66/வயலூர் சண்முகம்


இந்த விதமாய்த் தங்கராசு
இரக்கப் பட்டார் வேலுவுக்காய்!
அந்த ரங்கமாய் நங்கையும்தான்
“அழாதே” என்றே தேற்றிட்டாள்!

★★★★★

முப்பதாய் நாற்பதாய்ப் பனைமரங்கள்
மொட்டையாய்க் கருகிச் சாய்ந்தனவாம்!
எப்பொழுதும் கலங்கா மாமாவும்
இதனால் மிகவும் சோர்ந்துவிட்டார்!

கோதை மீண்டும் கடிந்திட்டாள்!
“குந்திக் கிடந்தால் கூழ்வருமா?
நாதன்; நங்கை இருவருடன்
நானாவது அயலூர் செல்கின்றேன்!

“தண்டச் சோற்றுப் பயலுடனே
தப்படி கூட நகராமல்
முண்டமாய்க் கிடங்கள்!” என்றிட்டாள்!
மூட்டை முடிச்சுகளைக் கட்டிவிட்டாள்!