பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

101


என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டதும், குதிரை மீது போர்த்தியிருந்த கம்பளித் துணி இனிமேல் தேவைப் படாதாகையால் அதைத் தன்னிடம் தந்துவிடும்படி வாஸிலி ஆன்ட்ரீவிச்சிடம் அவன் கேட்டுக் கொண்டான்.

ஆனால் வாஸிலி நிற்கவில்லை. தூள்மயப்பனியினூடே மறைந்து போனான் அவன்.

தனியனாய் விடப்பட்டதும், தான் இனிமேல் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி நிகிட்டா ஒரு கணம் யோசித்தான். ஏதாவது ஒரு வீடு இருக்கும் இடம் தேடித் திரிவதற்கு அவனது உடலிலே போதிய தெம்பு இல்லை என்பதை அவன் உணர்ந்தான். அந்தப் பழைய இடத்திலேயே உட்கார்ந்து இருப்பதும் இனி சாத்தியமில்லை. இதற்குள் அது பூராவும் பனியினால் நிரம்பி விட்டது. வண்டியின் உள்ளே கூட தான் கதகதப்பு பெற்று விட முடியாது என்றும் அவன் உணர்ந்தான். ஏனெனில், நன்றாகப் போர்த்திக் கொள்வதற்கு அவனிடம் எதுவுமே இல்லை. அவனுடைய கோட்டும் ஆட்டுத்தோல் அங்கியும், அவன் உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்கும் சக்தியை இழந்து விட்டன. துணிச்சட்டை தவிர வேறு எதுவும் அவன் அணிந்திராதது போலவே தோன்றியது. அவ்வளவு குளிரை அவன் உணர்ந்தான்.

அவனுக்குப் பயம் ஏற்பட்டு விட்டது. ‘ஆண்டவனே, பரமண்டலத்தில் உள்ள பிதாவே!’ என்று முணங்கினான் அவன். தான் தனியனாக இல்லை, தனது சொற்களைக் கேட்கக்கூடிய ஒருவன் இருக்கிறான்; அவன் தன்னைக் கைவிட்டு விட மாட்டான் என்ற உள்ளுணர்வு காரணமாக நிகிட்டா மன அமைதி