பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

113

சென்றான். ‘என்ன விஷயம்? நீ என்ன சொல்கிறாய்?’ என்று கேட்டான்.

‘நான் செத்.... செத்துக்... கொண்டிருக்கிறேன். அதுதான் விஷயம். எனக்குச் சேர வேண்டிய பணத்தை என் மகனிடம் கொடுங்கள். அல்லது என் மனைவியிடமே கொடுங்கள்; பரவாயில்லை’ என்று நிகிட்டா கஷ்டத்தோடு விட்டு விட்டுப் பேசினான்.

‘ஏன், நிஜமாகவே நீ உறைந்து போனாயா?’

‘இது எனது சாவு என்றே நான் உணர்கிறேன். கிறிஸ்துவின் பெயரால், நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள்’ என்று அழுகிற குரலில் சொன்னான் நிகிட்டா. ஈக்களை விரட்டுவது போல முகத்துக்கு எதிரே இன்னும் கையை வீசிக்கொண்டுதான் இருந்தான் அவன்.

அரை நிமிஷ நேரம் பேச்சற்று, அசைவற்று நின்றான் வாஸிலி. எதையாவது லாபகரமாக வாங்குகிறபொழுது அவன் கைதட்டி முடிவு செய்வது வழக்கம். இப்போதும் அதே தீர்மானத்தோடு திடீரென்று செயல் புரியத் தொடங்கினான் அவன். ஒரு அடி பின்வாங்கி நின்று, தனது சட்டையின் கைகளை மடித்துவிட்டுக் கொண்டு, நிகிட்டா மீதிருந்தும் வண்டியிலிருந்தும் பனியை அகற்றுவதில் அவன் ஈடுபட்டான். இதைச் செய்தானதும், அவன் அரைக் கச்சையை அவிழ்த்து ரோமக் கோட்டை நன்றாகத் திறந்து விட்டான். பிறகு, நிகிட்டாவைக் கீழேதள்ளி அவனுக்கு மேலேதான் படுத்துக்கொண்டு அவனை ரோமக் கோட்டினால் மட்டுமில்லாமல், சூடு பெற்றுக் கதகதத்துக் கொண்டிருந்த தனது தேகத்தினாலும் மூடி மறைத்தான். தனது கோட்டின் விளிம்பு-

64—9