பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

டால்ஸ்டாய் கதைகள்

யாள முளைகளைப் பற்றி அக்கறை கொள்ளாமல், முன்னிலும் துணிகரமாக வண்டியை ஓட்டினான். குதிரையின் திறமையில் நம்பிக்கை வைத்து அதை விரட்டினான்.

நிகிட்டா செய்தாக வேண்டியது எதுவுமில்லை. அதனால் அவன் தூங்கலானான். பொதுவாக இந்த மாதிரித் சந்தர்ப்பங்களில் இப்படிச் செய்வதுதான் அவனது வழக்கம். போதுமானபடி தூங்குவதற்குக் கிடைக்காத காலத்தை அவன் இவ்விதம் சரிக்கட்டி விடுவான்.

சடக்கென்று குதிரை நின்றுவிட்டது. அதனால் நிகிட்டா மூக்கில் அடிபடும்படி முன்நோக்கி விழுந்தான்.

‘விஷயம் தெரியுமா, நாம் மறுபடியும் வழியை விட்டு விலகிவிட்டோம்’ என்று வாஸிலி அறிவித்தான்.

‘அது எப்படித் தெரிந்தது?’

‘ஏன், முளைக்கம்புகளைக் காணவே காணோமே! நாம் திரும்பவும் ரஸ்தாவை விட்டு விலகி வந்திருக்கத் தான் வேண்டும்.’

அப்ப சரி. நாம் ரோட்டை தவறவிட்டு விட்டோமென்றால், கட்டாயம் தேடி ஆக வேண்டியது தான்' என்று வெடுக்கெனச் சொல்லிவிட்டு நிகிட்டா வண்டியிலிருந்து வெளியே இறங்கினான். புறாக்கால் மாதிரி விரல்கள் அமைந்திருந்த கால்களை மெதுவாக ஊன்றி அவன் மீண்டும் பனிப்பரப்பு மீது அங்குமிங்குமாக அலையத் தொடங்கினான். கொஞ்ச நேரம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தும், பிறகு பார்வையில் பட்டும்