பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

67


வண்டியின் முன்புறத்தில் தொங்கிய சாட்டையை எடுத்து நிகிட்டா ஒருமுறை குதிரையை அடித்தான். அதுவரை சாட்டை அடி பெற்றிராத நல்ல குதிரை முன்னால் பாய்ந்து, கொஞ்சம் குதித்து ஓடியது. ஆனால் உடனடியாக வேகத்தைக் குறைத்தும், பிறகு மிக மெதுவாகவும் நடக்கத் தொடங்கியது. இவ்விதம் ஐந்து நிமிஷ நேரம் அவர்கள் போனார்கள்.

இருட்டு சூழ்ந்துவிட்டது. பனி மேலேயிருந்து சுழன்று இறங்கியது. கீழேயிருந்து பொங்கி எழுந்தது. அதனால் சில சமயங்களில் வண்டியின் சட்டங்கள் கூடக் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும். சில சமயம் வண்டி அசையாமல் நிற்பது போலவும், வயல் பின் நோக்கி ஓடுகிற மாதிரியும் தோன்றியது. ஒரு இடத்தில் குதிரை சடக்கென்று நின்றுவிட்டது. தனக்கு முன்னால் மிக அருகாமையில் ஏதோ இருப்பதை அது உணர்ந்திருக்க வேண்டும்.

நிகிட்டா மறுபடியும் வெளியே குதித்தான். வார்களை வண்டியில் போட்டுவிட்டு, குதிரை ஏன் அவ்வாறு நின்றுவிட்டது என்று கவனிப்பதற்காக அவன் முன் பக்கம் போனான். குதிரைக்கு முன்னால் அவன் ஒரு எட்டு கூட எடுத்துவைத்திருக்கமாட்டான். அதற்குள் கால்கள் வழுக்கிவிட்டன. அவன் ஒரு சரிவிலே உருண்டு உருண்டு கீழ் நோக்கிச் சென்றான்.

அப்படி விழுகிற பொழுதே 'ஹோ, ஹோ, ஹோ!' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அவன். விழுவதைத் தடுத்து எழுந்து நிற்க வேண்டும் என அவன் முயன்றும் முடியாது போயிற்று. இழுபட்டு வந்து பள்ளத்தின் அடியிலே சேர்ந்து கிடந்த