பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

டால்ஸ்டாய் கதைகள்

கனமான பனிப்பரப்பிற்குள் கால்கள் புகுந்துவிட்ட பிறகுதான் அவன் உருளுவதை நிறுத்த முடிந்தது.

பள்ளத்தின் மேல் விளிம்பில் தொங்கிய பனிப்பாளத்தின் ஓரம் நிகிட்டாவின் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து சிலும்பல்கள் அவன்மேல் உதிர்ந்தன; கழுத்துக் காலரினுள்ளே புகுந்தன.

‘சே, என்ன வேலை இது!’ என்றான் நிகிட்டா. பனி ஓட்டத்தையும் பள்ளத்தையும் பார்த்துக் குறை கூறும் தோரணையில் பேசினான் அவன். பிறகு காலருக்குள்ளே போய்விட்ட பனியை வெளியே உதறுவதில் முனைந்தான்.

‘நிகிட்டா! ஏய் நிகிட்டா!’ என்று வாஸிலி ஆன்ட்ரீவிச் மேலேயிருந்து கத்தினான்.

ஆனால் நிகிட்டா பதில் குரல் கொடுக்கவில்லை. பனியைத் தட்டி உதறுவதிலும், சரிவில் உருண்டு விழுந்த போது தவற விட்டு விட்ட சவுக்கைத் தேடுவதிலும் அவன் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். சவுக்கைக் கண்டுபிடித்ததும் அவன் உருண்டு விழுந்த இடத்துக்கு நேராகவே ஏறிக் கரை சேர முயன்றான். ஆனால் அப்படிச் செய்வது சாத்தியமில்லாமல் போய்விட்டது. திரும்பத்திரும்ப உருண்டு விழுந்து கொண்டேயிருந்தான் அவன். ஆகவே பள்ளத்தின் அடியிலேயே நடந்து, மேலே ஏறிச் செல்வதற்கு வசதியான வழியைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. சுமார் ஏழு கஜ தூரம் தள்ளிச் சென்றதும், கால்களையும் கைகளையும் ஊன்றிக்கொண்டு சிரமப்பட்டு சரிவின் மீது ஊர்ந்து ஊர்ந்து மேலே ஏற முடிந்தது அவனால். உயரே வந்ததும் அவன் பள்ளத்து விளிம்பின் ஓர-