பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

33


5. பாடிய சான்றோர்கள்

தகடூர் யாத்திரை, உரைநடையும் இடையிடையே செய்யுட் களுமாகப் புலவர்கள் பலராலும் பற்பல நிகழ்ச்சிகளை குறித்துப் பாடப்பெற்ற ஒரு நூலாகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டினளவில் இந்த நூல் எழுந்ததாகலாம். ஏன் எனில், அதுவே தகடுர்ப்போரின் காலமாக அறிஞர்களால் கொள்ளப் பெற்றுள்ளது. -

இந்த நூற்செய்யுட்கள் எனத் தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் காட்டுவனவற்றால், அரிசில்கிழாரும் பொன் முடியாரும் பல செய்யுட்களைச் செய்ததாக அறிகின்றோம். ஒளவையார் பாடியவாக விளங்கும் புறநானூற்றுச் செய்யுட்கள் பலவற்றையும் நோக்கும் போது தகடூர் யாத்திரையின் செய்யுட்களாக இவற்றுள் சிலவும் விளங்கியிருக்கலாமோ என்ற ஐயம் நமக்கு ஏற்படாமல் இல்லை. இந்த மூவரின் வரலாற்றுக் குறிப்புக்களை சிறிதளவு இப் பகுதியில் அறிந்து கொள்ளுதற்கு நாம் முயல்வோம். -

அரிசில்கிழார்

அந்நாளில், கொள்ளிட்த்தின் வடபால், கும்பகோணத் திற்கு அண்மையில், அரிசிலாறு பிரியும் இடத்தில் 'அரிசிலுர்’ என்றொரு ஊர் இருந்தது. இவ்வூரிடத்து வேளாண்குடியில் பிறந்தவர் இவர். இவருடைய புலமையது புகழ் பரவுவதற்குத் தொடங்கிய பின்னர், இவரது இயற்பெயர் மறைந்து, அரிசில்கிழார் என்னும் ஊர்ப்பெயரே நிலைபெறலாயிற்று.

கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய பேகனை, அவன் மனைவி பொருட்டாகப் பாடிய புலவர்களுள் இவரும் ஒருவர். ஆதலால் இவரைக் கபிலர், பரணர், பெருங்குன்றுார்க்கிழார். பொன்முடியார் ஆகிய சான்றோர்களின் காலத்தவர் எனலாம்.

பேகனைப் பாடியபோது, அவன் செல்வக்குவை நல்கி இவரைப் பாராட்ட, அதனை ஏற்காது, எனக்குப் பரிசில் தருவதற்கு நினைத்தாயாகில், நின் மனைவியின் துயரைத் தீர்ப்பதற்கு இப்பொழுதே தேரேறிச் செல்வாயாக (புறம்.149)