உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

தகடூர் யாத்திரை


வியத்தக்க காணுங்கால் வெண்மையில் தீர்ந்தார் * வியத்தக்க தாக வியப்பர் - வியத்தக்க அல்ல வெனினும் அறியாதார் தாம்போல எல்லாம் வியப்பர் இனிது. - (ഗ്ഗ8 - 0

புறத்திரட்டுள் அவையடக்கம்’ என்னும் பகுதியுள் சேர்க்கப்பட்டிருக்கும் தகடூர் யாத்திரைச் செய்யுள் இதுவாகும். வெண்மையில் தீர்ந்தார், வியத்தக்க காணுங்கால் வியத்தக்கதாக வியப்பர்; வியத்தக்க அல்லவெனினும் தாம் அறியாதார்போல, அமைந்தவராய், எல்லாவற்றையும் இனிதாக வியந்து பாராட்டுவதும் இவர் இயல்பாம் எனவும் கூட்டிப் பொருள் கொள்ளலாம்.

‘சான்றோர், பிறரது செய்யுட்களுள் காணப்படும் குறைகளைப் பாராட்டாது, நிறைவுகளை மட்டுமே கண்டு பாராட்டி வியந்து பேசுவார்கள் என உரைத்து அவையடக்கம் கூறுகிறது இச் செய்யுள். -

இச் செய்யுளின் முதலடி, ‘வியத்தக்க காணுங்கால் வெம்மையில் தீர்ந்தார்’ எனவும் வழங்கும். ‘வெம்மை’ என்பதனைப் பிறர்பாற் பொறாமை கொண்டு பழித்தலாகிய தன்மை எனப் பொருள் கொண்டு உரைத்தல் வேண்டும்.

2. நீத்தார் பெருமை

உலகப் பற்றுக்களை விட்டுத் தம்மைக் கட்டுப்படுத்தி வாழ்கின்ற சான்றோர்கள் பெரிதும் பாராட்டுதலுக்கு உரியவர்கள் ஆவர். .

பெருஞ்சேரல் இரும்பொறை, ஒரு சமயம், உயர்நிலை உலகம் புகுந்த சான்றோர்களின் பொருட்டாக வேள்வி யொன்று செய்தனன். அந்த வேள்வியிற் கலந்து கொண்டு பயன்பெறுவது கருதியவராக இரு பிறப்பாளர்கள் பலரும் கொங்குவஞ்சிக்கண் ஒன்று திரண்டனர்.

அவர்களுட் பலரும், வளமான உடலினராகவும் உடையினராகவும் விளங்க, ஒருவர் மட்டும் மிகவும் எளிமையான தோற்றத்துடன் விளங்கினர். அவையிடத்திருந்த பலரும் அவரைக் கண்டு நகையாடி ஒதுங்கி அவர்பால் தமக்குள்ள வெறுப்பினைக் காட்டியவண்ணம் இருந்தனர்.

வேள்வி இனிதாக இயற்றிய பின்னர்ச் சேரமான் இருபிறப்பாளர்கட்கு வேண்டுவன வழங்கிச் சிறப்பிக்கத்