உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

தகடூர் யாத்திரை


நல்வயல் ஊரன் நறுஞ்சாந்து அணியகலம்

புல்லலின் ஊடல் இனிது. . . (புறத் 73)

'நம்மைப் பிரிந்து போர்மேற் கொண்டு செல்லல் வேண்டாவென ஒரு சிறந்த சொல்லைக் கேட்டுப் பணிவுடன் நின்ற நமக்கு இனிமை த்ரும்படியாக, அதனைக் கருதிலோம் என்று அவன் சொன்னான் இல்லை. பூக்குழலாய்! நன்மைப் பொலிவுடைய வயல்வளத்தாற் சிறந்த அத்தகைய நம் ஊரனின், நறிய சாந்தணிந்த மார்பினைத் தழுவுதலைக் காட்டினும், அவனோடு ஊடியிருத்தல்தான் நமக்கு இனிது’ எனத் தன் தோழிக்கு அவள் உரைத்தனள் என்று கொள்ளுக.

எனினும், அதிகனின் சொல்லாற்றலும் பண்பும் அவளால் மறக்கக்கூடியவாகவும் இல்லை. -

"சொல்லுங்கால் சொல்லின் பயன் காணும் திறன் உடையவன் அவன்; தான் பிறர் சொல்லிய சொல்லை வெல்லும் திட்பத்துடன் சொல்லுதற்கும் அறிந்தவன் அவன்; பலரும் பழித்த சொற்குற்றங்களைச் சாராமற் படிக்குஞ் சொல்லாடலினும் வல்லவன் அவன்.”

என, அந்தச் சிறப்பையும் கூறி, விதியின் வலியை நினைந்து நொந்து கொள்ளுகின்றான்.

அதனைக் கேட்டதும், பெருஞ்சேரலிரும்பொறையின் கண்கள் கலங்குகின்றன. கற்பின் பெருஞ்செல்வியான அந்தத் தேவியின் கலங்கிய முகத்தை நினைவு எடுத்துக்காட்ட, அவன் சோர்கின்றான். 'அந்த அம்மைக்கும் துயர் விளைக்குமாறு இப்படிப் போர் வந்து மூண்டதே எனக்கூறி, அவள் விதியை நினைந்து வேதனை கொள்ளுகின்றான்.

7. நூல்கண்டார் கண்ட நெறி

தகடூர் நாட்டிற்குத் திறைகேட்டுச் சென்ற தூதுவர்கள்

பெருஞ்சேரல் இரும்பொறைபால் வந்து, அவர் திறைதர மறுத்த

செய்தியைக் கூறுகின்றனர்.

பெருஞ்சேரல் சீற்றங் கொள்ளுகின்றான். உடனே தகடுர் நோக்கிப் படையெடுக்குமாறு ஆணை பிறப்பிக்கின்றான். அருகிருந்த அரிசில் கிழார் பொன்முடியார் போன்றோர் கவலையுறுகின்றனர். - .

"காலனைப்போலச் சினந்து எழுகின்ற பொறையனே யாம் சொல்லும் இதனைக் கேட்பாயாக'