52
தகடூர் யாத்திரை
அவ்வமயம், பொன்முடியாரின் உள்ளம் பெரிதும் வேதனைப்படுகின்றது. தகடூர்க் கோட்டையின் காவல் மேம்பாட்டைக் கருதும் அவர், வெற்றி தோல்வி எவ்வா றாயினும், சேரமானின் படையும் அதனாற் பேரழிவிற்கு உள்ளாதல் உறுதியாகும் என்பதனை உணர்கின்றனர்.
- ‘அரசே! நின் தம்பிதானே அதிகன்! அவனை வளைத்து
வெற்றி கொள்ளுதல் என்பதுதான் எதற்காக அவன் உரிமையுடனே வாழட்டும் என இந்த முற்றுகையைக் கைவிட்டு நாம் நம் நாட்டுக்குத் திரும்பி விடலாமே" என்கின்றார்.
போர்முனைக்கண், வெற்றியொன்றே கருதுவதன்றி உறவும் பிறவும் கருதிப் பார்ப்பது வீரரின் இயல்பாகுதல் பொருந்தாது. ஆகலின், சேரமான் அவருடைய கருத்தினை ஏற்றுக் கொள்வதும் இயலாதாக, அங்ங்னமே உரைத்தும் விடுகின்றான். அவனுடைய உள்ளத்தின்கண் அதிகமான்பால் அத்துணைச் சினம் முதிர்ச்சியுற்று வயிரம் பெற்றிருந்தது. ஆகவே, அவனை மாற்றுவதற்கு வகை அறியாதவரான பொன்முடியார், அவன் உணருமாறு, தகடூர்க் கோட்டையின் வலிமையைத் தாம் அறிந்த படியே அவனுக்கு உரைக்கின்றார். .
புறத்திரட்டு இதனைத் துது என்னும் பகுதியுட் சேர்த்துக் கொண்டிருப்பதனால், ஆன்றோர்கள் அதிகன்பாற் சென்று தூதுரைத்த நாளிற் பொன்முடியாரும் அவருள் ஒருவராக இருந்திக்க வேண்டும் என்று நாம் கருதலாம். அதுகாலை, தகடூர்க் கோட்டையின் காவல் மேம்பாட்டைக் கண்டு வியந்தவருள் ஒருவரான இவர், அதிகன்பாற் கொண்ட தம்முடைய ஆற்றாமை காரணமாக, அதனைப் பற்றிச் சேரமானிடம் உரைக்கின்றார் என்றும் கொள்ளுக.
“சேரமானே!" 'தகடுர் கோட்டையைக் கைப்பற்றுக என்னும் நின் ஆணையினைப் பெற்றதும், நின்னுடைய படையணிகளின் போர் முரசங்கள் ஒய்யென எப்புறமும் அதிர்கின்றன. வேற்படைகள் நிறைந்த கையினரான நின்படைஞர்களும் போரை விரும்பியவராக ஆர்த்தெழுந்து செல்லுகின்றனர்.
“இவ்வுலகம் அனைத்தும் அறிய, ஒர் அரசன் தன்னுடைய படை வலிமையை மேற்கொண்டு சென்று, பன்கவர் கோட்டைகளைக் கைப்பற்றி வாகைசூடுவது இந்த உழிஞை வகையினாற்றானே?” என நீயும் என்பாற் கேட்கின்றாய். ஒருவகையில் அதுவும் சரியாக இருக்கலாம்.