பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

தகடூர் யாத்திரை


ஒற்றரின் வாயிலாகத் தகடுரார் ஆநிரைகளைக் காத்து நிற்கின்ற காவல் மேம்பாட்டினையும், அவை நிற்கும் இடங்களையும், அறிந்து கொண்ட சேரர் படைத்தலைவர்கள், அவற்றைச் சென்று கவர்ந்து வருதற்கு வேண்டிய திட்டங்களை வகுக்கின்றனர். அப்பொழுது படைமறவர் செல்லுதற்கான நல்ல சொல்லினைக் கேட்கும் நிமித்தமாக, அவர்கள் காத்திருக்கின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் நற்சொல் நெடுநேரமாகியும், அவர்கட்கு வாய்க்கவில்லை.

இந்த நிலையிலே, இளமையின் செருக்கினாலே துடிக்கின்ற உள்ளத்தவனாகிய ஒரு தலைவன், நற்சொல் கேட்டலுக்காக நாம் காத்திருத்தல் வேண்டா; உடனேயே அரசனின் ஏவலை நிறைவேற்றுவதற்கு எழுவோம் என்கின்றான்.

விரிச்சி (நற்சொல்) விலக்கிய வீரக் குறிப்பான இதனைக் காணும் ஆன்றோர், அந்த ஆண்மையாளனின் ஊக்கத்தை வியந்து. இந்தச் செய்யுளைச் சொல்லுகின்றனர்.

நாளும் புள்ளும் கேளா ஊக்கமோடு எங்கோன் ஏயினன் ஆதலின் யாமத்துச் செங்கோல் வெட்சியும் தினையும் தூஉய் மறிக்குரற் குருதி மன்றுதுகள் அவிப்ப விரிச்சி யோர்தல் வேண்டா - எயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரைே (புறத் 124)

‘நன்னாள் எதுவென்பதையும், நன்மை தருகின்ற புள் நிமித்தம் யாதென்பனையும் கேட்டறியாதானாக, உள்ளத்தின் ஊக்கமே தன்னைச் செலுத்த, எம் தலைவனான சேரமானும், எம்மை நிரைகவர்ந்து வருகவென்று ஏவினான்.

“ஆதலின், யாமப்பொழுதாகிய இவ்வேளையிலே, சிவந்த கால்களையுடைய வெட்சிப் பூக்களையும்.தினையரிசியையும் தூவி, ஆட்டுக்குட்டிகளை அறுத்துப் பலியிட்டு வழிபட்ட நாம் நற்சொல் கேட்டலை நாடுதல் வேண்டாம். அறுபட்ட மறிகளின் கழுத்துக்களினின்றும் சோரும் குருதி மன்றிடத்தெழும் புழுதியை அவிக்கும் படியாக, மீண்டும் மீண்டும் பலியிடலும் வேண்டாம். - "பகைவர் நாட்டிடத்துள்ள நிரைகளையெல்லாம், யாமே சென்று இந்தக் கோட்டைப் புறத்தே கொண்டு தருவோம். எமக்கு விடை தருக"