பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

57


இவ்வாறு கூறி, ஆர்ப்பரித்து எழுகின்றான் மறவர் தலைவன் ஒருவன்.

நாளும் புள்ளும் கேளா'என்பதற்கு நன்னாளும் நற்சொல்லும் கேட்டறிந்து' எனவும் பொருள் கொள்ளலாம். அப்போது, மன்னனே கேட்டறிந்து, ஊக்கமோடு எம்மை . ஏவினதன் பின்னர், விரிச்சி கேட்டலும் வேண்டுமோ என்று உரைத்தாகச் கொள்க.

18.நின்று செவியேற்றன!

சேரர் படைத் தலைவர்கள், தம்முன் வீரவாசகத்தைப் பேசிநின்ற அந்தப் படைத்தலைவனது ஆண்மையின் மேம் பாட்டினை நன்றாக அறிந்தவர்கள். ஆதலின், அவனுடைய ஊக்கத்திற்கு இசைந்தவர்களாக, அவனைச் செயன்மேற் செல்லுமாறு ஏவுகின்றனர். அவனும் தன்னோடு ஊக்கமுடைய உறுதியாளர் சிலருடன் சென்று, தகடுரார் ஆநிரைகளைப் பேணி வைத்திருந்த இடத்தினை அவரறியாதே சென்று. அடைந்து விடுகின்றான்.

நள்ளிரவு வேளையிற் காவலர் கண்ணயர்ந்திருக்கும் நேரத்தில் தகடுர்க் காவன்மறவர்கள் மேற் பாய்ந்து வெட்டி வீழ்த்தத் தொடங்குகின்றனர் சேரநாட்டார். தகடூர்க் காவன்மறவர்கள், தாம் எதிர்பாராத நிலையிலே வந்து தாக்கிய சேரநாட்டாரின் செயலால், ஒருகணம் திகைப்புற்று நின்றனராயினும், அடுத்து அவர்களை எதிர்த்துக் கடுமையாகப் போரிடுகின்றனர். எனினும், எண்ணிக்கையில் குறைந்த தொகையினராக விருந்த அவர்களால், வந்து தாக்கிய சேரநாட்டாரின் கடுமையான தாக்குதலை நெடுநேரம் தாக்குப்பிடிக்க இயலவில்லை. ஒவ்வொருவராக அவர்கள் வீழத்தொடங்கினர். சேரநாட்டாரும் வெற்றிக்களிப்புடன் நிரைகளைக் கைப்பற்றிக்கொண்டு, தம்முடைய பாசறையை நோக்கி ஒட்டிக்கொண்டு போகத் தொடங்குகின்றனர்.

இந்தச் செய்தி தகடுர்ப் படைமறவர்க்கு வெகு விரைவில் கிடைத்துவிடுகின்றது. அவர்கள் கொதித்து எழுகின்றனர். ப்ோராண்மையாலும் நாட்டுப்பற்றாலும் மேலோங்கி நின்ற ஒரு படையணி உடனே திரளுகின்றது. வேகமாகச் செல்லக்கூடிய குதிரைகளின்மீது ஏறியவராகத் தகடுர் மறவர்கள் , தங்களது . நிரையை மீட்டு வருதலின் பொருட்டாகக் கவர்ந்து சென்று கொண்டிருக்கும் சேரநாட்டாரைப் பின்தொடர்கின்றனர்.