பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

தகடூர் யாத்திரை


வேளையோ நள்ளிரவு கழிந்த பொழுது; சேரநாட்டவர் இன்னமும் தகடூர் பகுதியினைக் கடந்துபோய் விடவில்லை. வழியில் அவர்களைக் கண்ட தகடூர்ப் படையினர், அவர்களை வளைத்துக் கொண்டு, கொல்லும் புலிகளைப்போலச் சீற்றுத்துடன் போரிடுகின்றனர்.

வெற்றிக் களிப்போடு சென்ற சேரப்படையினர், எதிர்பாராத அந்தத் தாக்குதலை எதிர்நின்று வெற்றிகாண முடியாமல் சிதைந்தும், அழிந்தும் போகின்றனர். நிரையை மீட்டுக் கொண்டவராகத் தகடுர் மறவர்கள் தம் நாட்டிற்கு மீள்கின்றனர். - அங்ங்னம் திரும்புகின்றபொழுது, தாம் நிரைமீட்ட போரிடையே நிகழ்ந்த பற்பல நிகழ்ச்சிகளையும் ஒருவரோ டொருவர் சொல்லி மகிழ்ந்தவண்ணமாக, அவர்கள் களிப்புடன் வருகின்றனர். அவர்களுள் வீரமறவன் ஒருவன், தன் அருகே வருகின்ற மற்றொருவனிடம் உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.

“நண்பனே! பெரிதான இந்த உலகத்திடத்தே எத்தகைய உயிர்வகையாகப் பிறந்தபோதும், மாலைப் பொழுது வந்து பொருந்துமாயின், அது அனைத்திற்கும் இனிதாக இருக்கும்

"ஆனால் நமக்கோ, இந்த இரவின்கண் சென்று பகைவரைப் பொருதி வெற்றியுடன் மீள்கின்ற இதுவும் இனிதாகவே இருக்கிறது. . . - “பசுக்களைக் கவர்ந்துகொண்டு போகிய சேரநாட்டு மள்ளர்கள், தம் வெற்றிச் செருக்கினால் நிரைகளை ஒர் புறத்தே நிறுத்திவிட்டுக், கானிடத்தே தம்முள் அளவளாவியிருந்த போதில், நாம் சென்று அவர்களின் புறத்தே சூழ்ந்து, அவர்களை வளைத்துக் கொண்டோம். . . . "அப்போது, அவர்கள் வசப்பட்டுச் சென்ற நம் ஆக்கள், தாம் தம்முடைய கன்றுகளின் குரலைக் கேட்டனபோல, நம் ஆரவார ஒலியைக் கேட்டவையாய்த் தம் செவிகளை உயர்த்து நின்றனவே! அந்தக் காட்சியை என்னென்பது? ஆண்மையாளனாகிய அவனது அந்த வியப்பு, அவன் உடனிருந்த வீரனை மட்டுமல்லாது, நம்மையும் இன்று இன்புறுத்துகின்றது. இந்த வகையில், அதன் நிலைபேற்றை உறுதிசெய்தனர் தமிழ்ச் சான்றோர்.