பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

61


இருநிலம் மருங்கின் எப்பிறப் பாயினும் * மருவின் மாலையோ இனிதே இரவின் ஆகோள் மள்ளரும் அளவாக் கானத்து நாம்புறத் திறுத்ததென மாகத் தாந்தங் கன்றுகுரல் கேட்டன போல н - நின்றுசெவி யேற்றன சென்றுபடு நிரையே!

- (ഗ്ഗഴ്സ് - 25) - 'ஆவினம்கூடத் தம் நாட்டவரிடம் அத்தகைய பாசத்தைக் -கொண்டிருந்தன என்று கூறுகின்ற தகடுர் மறவனின் நாட்டுப் பற்று.நம்மைப்பெருமிதங்கொள்ளச்செய்கின்றது.'கன்று குரல் கேட்டன போல’ என்று கூறும் வாசகம், அந்த நாட்டுப்பற்றின் பெருமிதச் செறிவிலே எழுந்த ஒப்பற்ற வாசகம் ஆகும்.

14. அதிகனின் கொடை!

அதிகமானின் கொடையைப் பற்றிய சிறப்பினை ஒளவையாருக்கு அருநெல்லிக்கனி வழங்கிய அந்த ஒப்பற்ற அரிய செயல் ஒன்றே என்றும் அழியாமல் நிலைபெறுத்துவதாகும். எனினும், அவனுடைய அந்த வள்ளன்மையின் மற்றொரு நிலையினை நமக்குக் காட்டுகின்றார் தகடூர் யாத்திரைச் செய்யுள்களைச் பாடிய சான்றோருள் ஒருவர்.

அதிகமானைக் கண்டு அவனைப் பாடிப் பரிசில் பெற்று மகிழவேண்டும் என்ற விருப்புடன் செல்கின்றார் ஒரு புலவர். அவர் சென்று சேர்ந்த வேளையோ மிகவும் பொருத்தமற்ற

வேளையாக இருந்தது. -

தகடூர் நாட்டின் புகுந்து கொடுமை செய்து கொண்டிருந்த சேரநாட்டவரால், தன் மக்கள் படுகின்ற துயரங்களைக் கேட்டுப் பொங்கியெழுந்த சினத்தால், அவர்களது செருக்கினை அடக்கி மீள்வேன்' என்று கொதித்து எழுந்து வருகின்றான் அதிகமான். அவனுடைய ஆண்மையின் பெருமிதமும், பேராற்றலின் சிறப்பும், தகடூர் மற்றவர்கட்குப் பேருக்கத்தைத் தர, அவர்களுள் குறிப்பிட்ட சிலர் அவனைத் தொடர்ந்து துணையாகின்றனர்.

இப்படிப் பகைவரைத் தாக்குதற்கான போர் வெறியுடன் சென்ற அதிகன். ஓரிடத்தே பாசறையிட்டுத் தங்கியிருந்தபோது தான், புலவர் அவனைப் பாடிப் பரிசில் பெற்று மகிழவேண்டும் என்று செல்கின்றார். அவன் புகழைப் பாடிப் போற்றியும் மகிழ்கின்றார். .