பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

தகடூர் யாத்திரை


அதிகமான் புலவரது புலமையை வியந்து பாராட்டு கின்றான். தன்முன் பகுத்துக்கிடக்கின்ற படைக்கலன்களை நோக்குகின்றான். அவை புலவர்க்குப் பயன்படாதனவென்று ஒர்கின்றானில்லை. பகுத்துப் பக்கங்களில் அணிகலன் பூட்டிய சிறப்புடன் விளங்கும் குதிரைகள் பூட்டிய தன்னுடைய தேரினை நோக்குகின்றான். அதனை வழங்குவது சிறப்பாகத் தோன்றவே,

புலவர் பெருமானே! இதோ இந்த தேரினையும், கழித்துக் கிடக்கும் இந்தப் படைக்கலங்களுள் பலவற்றை மிகுதியாகவும் பெற்றுக் கொள்க’ என வழங்குகின்றான்.

பகைவரை வென்று பறித்துவந்த அந்தப் படைக்கலக்குவை, அவனுடைய வெற்றிமிடுக்கைப் பறைசாற்றுகின்றது. புலவரின் உள்ளமும் அதனாற் பெருமிதங் கொள்கின்றது.

வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந் தேத்தினர்க் கீத்துமென் றெண்ணுமோ? - பாத்திப் புடைக்கல மான்றே ருடனித்தா னித்த படைக்கலத்திற் சாலப் பல. )7257 - نيراري(

“வேற்றரசரோடு போர் செய்வதனை மேற்கொண்டு. செல்பவனான அதிகமான், களத்தினின்றும் மீண்டு வந்த தன்பின்னர், தன்னைப் போற்றிய இரவலர்க்குப் பரிசில் தருவோம் என்று எண்ணுவானோ? எண்ணுவான் அவன் அல்லன்.” - -

"அவ்விடத்தில் அவன்பால் இருந்ததான, பகுத்துப் பக்கங்களில் அணிபூட்டிய குதிரைகளுடன் விளங்கிய தேரினை உடனேயே கொடுத்தானே! அத்துடன் கழித்துக்கிடந்த படைக் கலங்களில் மிக அதிகமாக எடுத்துக்கொள்க என்றும் சொன்னானே'

இவ்வாறு போற்றுகின்றார் கவிஞர். போர்க்களத்தினும் உவந்து உள்ளதை அளித்து உவக்கின்ற அதிகமானின் உள்ளச் சால்பு ஈகைச் சிறப்பு நம்மையும் வியப்பில் ஆழ்த்துகின்றது.

15. மறவர் உயிர் நேர்ந்தார்

பழந்தமிழகத்தில் போர் நிகழ்ச்சி என்பதும் இன்னின்ன படிதான் நடைபெற வேண்டுமென்கின்ற ஒரு மரபு இருந்திருக் கிறது. வெட்சியாராயினும், கரந்தையா ராயினும், உழிஞையா ராயினும், நொச்சியாராயினும் தாம் மேற்கொள்ளவிருக்கும் போருக்கு முன்னால் பற்பல நடைமுறைகளை மேற்கொண்டவர் களாகவே இருந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட மரபுகளுள்