பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நூன் முகம் கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி என்றாதி 22 ஜில்லாக்களையும், ஆங்கிலேய இராஜாங்கத்தாரால் நியமிக்கப்பட்ட கலெக்டர் முதலான காரியஸ்தருடைய ஆளுகைக்குள் ஏஜென்ஸி டிராக்ட்ஸ் (Agency Tracts) என்று வழங்கும் கஞ்சம், விசாகப்பட்டணம், கோதாவரி இந்த ஜில்லாக்களின் சில பாகங்களையும், சுதேச மன்னர்க்குட்பட்ட திருவனந்தபுரம், கொச்சி, புதுக்கோட்டை, சேன்டூர் முதலான பாகங்களையும் உடையதாயும், சுமார் 1750 மைல் கடற்கரை நீளமுள்ளதாயும் இருக்கிறது. மேலும், கிழக்குக்கணவாய் மேற்குக்கணவாய் என்னும் மலைத் தொடர்ச்சிகளும், அத் தொடர்ச்சிகளில் சில சிறந்த சிகரங்களும், அவற்றிலிருந்து உற்பத்தியாகும் சில சிறந்த நதிகளும் இருக்கின்றன. இந்த ராஜதானியிலிருக்கும் முக்கியமான மலைகளும் ஆறுகளும் இந்த ராஜதானியில் கிழக்கு மேற்குக் கணவாய்களில் முக்கியமான மலைகள் எவையெனில்:- நீலகிரிமலை:- இது கோயமுத்தூரையடுத்த நீலகிரி ஜில்லாவில் இருக்கிறது. இதன் உன்னத சிகரமாகிய தொட்டபெட்டா என்பது 8728 அடிகள் உயரமுள்ளது. தென்மேற்குப் பாகத்தில் குண்டா (Kunda) என்னும் மலைத்தொடரும் இருக்கிறது. இந்த நீலகிரியைச் சார்ந்த உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி முதலானவிடங்களில் காப்பி, தேயிலை, சின்கோனா முதலானவை விசேஷமாக விளைவிக்கப்படுகின்றன. உதகமண்டலமானது இந்த ஜில்லாவிற்குப் பிரதான பட்டணம். அங்கே டிஸ்ட்றிக்ட் கலெக்டர், சப் ஜட்ஜ் முதலானவர்களின் சச்சேரிகள் இருக்கின்றன. இது ராஜதானியின் கவர்ன்மெண்டுக்குக் கோடைகால வாசஸ்தானமாய் இருக்கிறது. அநேக ஐரோப்பிய தோட்டக்காரர்களும் வர்த்தகர்களும் இங்கு வசித்து வருகிறார்கள். சேர்வராயன்மலை:- இது சேலத்துக்கு அருகில் இருக்கிறது. இதன் சிகரமாகிய ஏற்காடு 5400 அடிகளுக்கு மேல் இருப்பதால் இதில் காப்பிக்கொட்டை முதலானவை