பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நூன் முகம் விளைவிக்கப்படுகின்றன. கோடை காலத்தில் ஐரோப்பியர்கள் வந்து தங்குகின்றார்கள். இங்கே ஒரு சப் மாஜிஸ்டிரேட் கச்சேரி இருக்கிறது. இதன் தொடர்ச்சியில் காளேரி, பச்சைமலை, ஜவ்வாது மலை என்ற மலைச் சிகரங்கள் இருக்கின்றன. காளேரிமலை, 4000 அடிகள் உயரமுள்ளது. பச்சைமலை, 2000 முதல் 3000 அடிகள் உயரமுள்ளது. ஜவ்வாதுமலை, 5400 அடிகள் உயரமுள்ளது. கோடைகானல் மலை, அல்லது வராகமலை என்று சொல்லப்படும் பழனிமலை மதுரை ஜில்லாவில் இருக்கிறது. இதன் சிகரம் 8000 அடிகள் உயரமுள்ளது. இது இந்த ஜில்லாவின் வடகிழக்குத் திசையில் 54 மைல்கள் நீளமுள்ளது. இவ்விடத்தில் அநேக ஐரோப்பியர்கள் கோடைகாலத்தில் வந்து வசிக்கிறார்கள். இங்கு கவர்ன்மெண்ட் நக்ஷத்திர ஆபீசும், சப் மாஜிஸ்ட்ரேட்டு கச்சேரியுமிருக்கின்றன. இம்மலைத் தொடருக்குக் கிழக்கே சிறுமலை என்னும் சிகரம் இருக்கிறது. இது 3500 அடிகள் உயரமுள்ளது. இவ்விடத்தில் ஒருவித விசேஷமான வாழைப் பழங்கள் விளைகின்றன. திருவண்ணாமலை - இது தென் ஆற்காடு ஜில்லாவில் இருக்கிறது. இதன் உன்னத சிகரம் 2700 அடிகள் உயரமுள்ளது. இதில் ஒரு புறத்தில் கோட்டையும் மற்றொரு புறத்தில் சிறந்த தேவாலயமும் இருக்கின்றன. திருப்பதி என்னும் திருவேங்கடமலை:- இது வட ஆற்காடு ஜில்லாவில் இருக்கிறது. இது 2500 அடிகள் உயரமுள்ளதாயும், சிறந்த விஷ்ணு தேவாலயமுடையதாயும் இருக்கிறது. கம்பாக்கம் மலை. இது செங்கற்பட்டு ஜில்லாவில் இருக்கிறது. இது 2500 அடிகள் உயரமுள்ளது. வெலிக்கொண்டாமலை:- இது நெல்லூர் ஜில்லாவில் இருக்கிறது. இதன் உன்னத சிகரம் உதயகிரி 2000 அடி முதல் 3000 அடிகள் வரையில் உயர்ந்திருக்கிறது. பாபிகோண்டாமலை:- இது கோதாவரி ஜில்லாவில் இருக்கிறது. இது 3000 அடிகள் உயரமுள்ளது. இதில் விசேஷ தேக்குமரங்களும் பாக்குமாச் சோலைகளும், அடர்ந்த காடுகளும் இருக்கின்றன.