பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கக நூன்முகம் பாலகொண்டா:- இது விசாகபட்டணம் ஜில்லாவில் இருக்கிறது. இது 5000 அடிகள் உயரமுள்ளது. இதற்குச் சமீபத்தில் கோல்கொண்டா என்னும் மலையும் இருக்கிறது. மலைய பருவதம்:- இது கஞ்சம் ஜில்லாவில் இருக்கிறது. இது சுமார் 3000 அடிகள் உயரமுள்ளது. பச்சைமலை:- இது திரிசிராப்பள்ளி ஜில்லாவில் வடமேற்கில் இருக்கிறது. இது 2500 அடிகள் உயரமுள்ளது. ஆனைமலை - இது கோயமுத்தூர்க்குத் தெற்கே உள்ளது. இதன் சிகரம் 8800 அடிகளுக்கு மேலிருக்கிறது. இதைச் சார்ந்த ஏலக்காய் மலையென்னும் ஒரு உன்னத பர்வதமும் இருக்கிறது. குதிரைமுகம்:- இது தென்கன்னடம் ஜில்லாவில் இருக்கிறது. இது 6200 அடிகள் உயரமுள்ளது. சந்தூர்மலை. இது பல்லாரி ஜில்லாவிற்கு மேற்கே உள்ளது. இதின் சிகரம் ராமதுர்க்கமெனப்படும். நல்லமலை: இது கர்நூல் ஜில்லாவில் இருக்கிறது. இதன் முக்கிய சிகரம் வெளிகொண்டாமலை. இது சுமார் 8800 அடிகள் உயரமுள்ளது. இதன் தென் பாபத்தில் அகஸ்தியர் மலை இருக்கிறது. இது 6200 அடிகள் உயரமுள்ளது. வெள்ளியங்கிரிமலை அல்லது முத்திகுளம் மலை:- சுமார் 5000 அடிகள் உயரமுள்ளது. கோயமுத்தூருக்கும் மலையாளத்திற்கும் மத்தியில் இருக்கிறது. பிளிகிரிரங்கன் மலை - கோயமுத்தூர் ஜில்லாவைச் சேர்ந்த சத்தியமங்கலம், கொள்ளேகாலம் தாலுக்காக்களுக்கு மத்தியில் இருக்கிறது. இது சுமார் 3000 அடிகளுள்ளது. இவைகளன்றியில் மருதமலை, சென்னிமலை, தாயுமானவர் மலை, சின்ன திருப்பதி மலை முதலானவைகள் மிகச் சிறிய மலைகளேயாம். கதுகை காவிரி நதி. வட இந்தியாவிற்குப் பெரிய நதியாயினதுபோலக் காவிரி இந்த ராஜதானிக்குப் பெரிய நதியாம். குடகு காட்டிலே மேற்குமலைத் தொடரைச் சேர்த்த பிரமகிரியில்,