பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கஉ

நூன் முகம்


தலைக்காவிரி என்னும் இடத்தில் அது உற்பத்தியாகி, அந்த நாட்டின் ஊடாக வந்து, மைசூரின் தென்பாகங்களின் வழியாய்ப் பாய்ந்து, கோயமுத்தூரையும் சேலத்தையும் பிரிக்கும் எல்லையாகி, திரிசிராப்பள்ளி மார்க்கமாய்த் தஞ்சாவூரில் புகுந்து, பற்பல கிளையாய்ப் பிரிந்து, இந்து சமுத்திரத்திலே விழுகின்றது. இதன் நீளம் நானூற்று எழுபத்தைந்து மைல்கள். தென் தேசங்களுக்கெல்லாம் கங்கை போன்று இருத்தலால், இதனைத் தக்ஷிண கங்கை என்பர். போகும் வழி முழுவதும் பரிசுத்த ஸ்தானமாக மதிக்கப்படும். வருஷா வருஷம் துலா மாதத்தில், கங்காநதி பூமிக்கு உள்ளாக வந்து, காவிரியில் படிந்து தன்பால் தீர்த்தமாடிப் பாவ நிவர்த்தி செய்த யாத்திரைக் குழாங்களால் தனக்கு நேரும் தோஷத்தைப் பரிகரிக்கின்றதென்பது புராண வார்த்தை. காவிரி புராணம் என்னும் ஒரு நூல் உள்ளது. அதில் காவிரி நதியின் பூர்வ சரித்திரம் பின்வருமாறு கூறப்பட்டிருக்கின்றது:- அகத்திய முனிவர் முற்காலத்தில் மேலை மலைகளில் வசித்திருந்தபோது கவீரர் மகளாகிய காவிரியை மணம் புரிய விரும்பினார். காவிரி முனிவர் பிரமகிரியிலே ஐம்புலனையும் அடக்கி யோகத்தில் இருந்தார். காவிரி தன் பிதாவிற்கு உலகத்திலே பெருங் கீர்த்தி உண்டாகவும், சகல ஜனங்களும் அவரைத் துதிக்கவும் தக்க தாய்த் தான் ஒரு நதியாய் அவதரித்து, பூமிக்கு நன்மை பயக்கும்படி மிக்க ஆசை பூண்டிருந்தாள். இந்த வரம் தனக்கு அளிக்குமாறு கடவு ளைப் பிராத்தித்தாள். கடவுளும், அவள் வேண்டியபடி ஒரு பெரு நதியாய்ப் பிரகாசிக்க வரம் அளித்தனர். அகஸ்தியர் அவளைத் தனக்கு மனையாளாகும்படி வருத்தியபோது, அவள் தன் மனக்கோளை மாற்றப் பிரியம் இல்லாமல் முத லிலே மறுத்தாள். பின்னர், தன்னை எந்நாளாயினும் அவர் தன்னந் தனியாயிருக்க வருவாராயின், தான் அவரை விட்டு அகலுதற்கு அவரிடம் விடை பெற்றுக்கொண்டு சம்மதிக்காள். நெடுங்காலம் அகஸ்தியர் தமது வாக்கு அழியாமல் அவளைப் பிரியாமல் இருந்தார். ஒரு தினம் வீட்டிலே தமது சிஷ்யரை வைத்துவிட்டு, அவர் பிரமகிரியிலே தமது திருக் குளத்திற்குச் சமீபத்திலுள்ள நதியில் நீராடப்போனார். போனவுடனே, அவர் மனைவி குளத்திலே விழுந்து மறை