பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்முகம்

க௩

ந்து, ஒரு திவ்விய நதியாயினள். அது குளத்தினின்று வழிந்து பெருகத் தொடங்கியது. அகத்தியருடைய சீஷர் அதனை ஓடாமல் சிறை செய்ய முயல, அது தரையின் கீழாய் ஊடுருவிப்பாய்ந்து சிறிது தூரம் சென்று வெளியே புறப்பட்டது. அகத்தியர் ஓடோடி வந்து தம்மை மன்னித்து இல்வாழ்க்கையை நடத்தியிருக்கும்படி தமது பத்தினியை இரந்தார். அவள் ஒருபுறம் தன் விருப்பை ஒழிக்கவும், மறுபுறம் அகத்தியர் மனத்தை வருத்தவும் மாட்டாதவளாய் இறுகினாள். ஒருகூறு காவேரி நதியாய்ப் பெருகியது. மற்றைக் கூறு அகத்தியர் தம் பத்தினி வடிவாய் அவர்பால் தங்கியது.

இக்கதை ஸ்காந்தத்தில் உள்ளதாகக் காவிரி புராணம் சொல்லினும், ஸ்காந்தம் சங்கரசங்கிதை சிவா கசியகண்டம் அசுரகாண்டத்தில், அது வேறுவிதமாய்க் கூறப்பட்டிருக்கின்றது. அதனை இங்கே கூறுகின்றோம்;

அகத்தியர் பொதியமலையிலே வசிக்கும்படி தக்ஷிணம் நோக்கி வந்தபோது தமது நித்திய பூஜாகிரியைகளுக்கு உபயோகிக்கும் பொருட்டும், பரிசுத்த நீர்த்தம் தென்றிசைக்கும் ஒன்று உண்டாகும் பொருட்டும், பரமசிவன் உத்தரவு பெற்றுக் கயிலாயத்திலிருந்த சப்த நதிகளில் ஒன்றான பொன்னி நதியைத் தமது கமண்டலத்தில் அடைத்து வந்தார். அக்காலத்தில் சூரனது கொடுமைக்கு அஞ்சி, வேற்றுரு அமைந்துவந்து, இந்திரன் சீகாழியில் ஒரு புஷ்ப வனம் வைத்து, அதன் மலர்களால் சிவபெருமானை அர்ச்சித்துக்கொண்டிருந்தான். மழை இன்மையால் வனத்தில் உள்ள மரம் அனைத்தும் வாடி இந்திரனுடைய பூஜைக்குப் புட்பம் இல்லாமற்போயிற்று. அகத்தியர் பொன்னி நதியை ஒரு கமண்டலத்தில் அடைத்துக்கொண்டு கொங்குதேசம் வரைக்கும் வந்திருப்பதை அவன் நாரதரால் அறிந்து, அக்கமண்டலத்தைக் கவிழ்த்துத் தன் நந்தவனத்திற்கு நீர் பெருகிவரச் செய்யுமாறு விநாயகரை வணங்கி வேண்ட, அவர் ஒரு காக்கை வடிவாய்க் கமண்டலத்தில் உட்கார்ந்து அதனைக் கவிழ்த்துவிட்டார். அதிலிருந்து நீர் பெருகிக் காவிரியாய்ப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

காவிரியாறு ஓர் தடாகத்தில் உற்பத்தியாவதற்கும், தரையின் கீழ்ச் சிறிது தூரம் போய் அப்புறம் வெளிவந்து பாய்வதற்கும், அகத்தியர் வசத்திலிருந்து தோற்றியதற்,