பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நூன் முகம் ஆரியர் திவ்ய தேச யாத்திரைச் சரித்திரம் என்னும் இதன் முதற் புத்தகத்தில் ஆரிய நாடாகிய இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மேற்கு பாகங்களிலுள்ள திவ்ய நீர்த்த திவ்ய ஸ்தல திவ்ய பர்வதங்களின் சரித்திரத்தைச் சங்கிரகமாகச் சொல்லியிருக்கிறோம். இந்த இரண்டாம் புத்தகத்தில் ஆரிய நாட்டின் தென்பாகமாகிய டக்கனி அல்லது தென் இந்தியாவிலுள்ள திவ்ய ஸ்தல திவ்ய தீர்த்த திவ்ய பருவ தாதி பிரதேசங்களின் விவரங்களைச் சொல்லுகின்றோம். அப்படிச் சொல்லுமுன் இந்தத் தென்னிந்தியா மகம்மதிய ஆங்கிலேய அரசர்களுக்குச் சுவாதீனமாகுமுன் இது தொண்டைநாடு, மத்ய அல்லது மகதநாடு, சேரநாடு, சோழநாடு, தெலுங்குநாடு, பாண்டியகாடு, ஈழநாடு, பன்றி நாடு, புனல்நாடு, துளுவநாடு என்றாதி பெயர்களால் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டுச் சுதேச மன்னர்களால் ஆளப்பட்டுவந்தது. பிறகு ஆங்கிலேயரால் இதற்குச் சென்னை ராஜதானி என்றும், இதற்குப் பிரதானப்பட்டணம் சென்னை நகரம் என்றும் வழங்கி வருவதால் இந்த ராஜதானியின் விவரத்தைச் சற்றுச் சங்கிரகமாகச் சொல்லவேண்டி வந்தது. சென்னை ராஜதானியின் சங்கிரக விவரம். இச்சென்னை ராஜதானி வடகிழக்குக் கோடி முதல் தென் மேற்குக் கோடி வரையில் 950 மைல்கள் நீளமுள்ளதாயும், அதிகமாய் அகன்றிருக்கிற இடத்தில் அதன் அகலம் 450 மைல்கள் உள்ளதாயும், வடக்கில் பம்பாய் இராஜதானி, ஐதராபாத்து, மத்திய மாகாணங்கள், வங்காளக் கீழ் மாகாணங்களையும், மேற்கில் அரபிக்கடலையும், தெற்கில் இந்து சமுத்திரத்தையும், கிழக்கில் வங்காளக் குடாக் கடலையும், எல்லைகளாக உடையதாயும், ஆங்கிலேயர் ஆளுகைக்குட்பட்ட கஞ்சம், விசாகபட்டணம், கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், செல்லூர், சென்னைப்பட்டணம், செங்கற்பட்டு, தென் ஆற்காடு, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, தென் கன்னடம், மலையாளம், பல்லார், அனந்தபுரம், கடப்பை, கர்நூல், நீலகிரி, வட ஆற்காடு, சேலம்,