பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முகவுரை சப்தஸ்தான க்ஷேத்திரங்கள். 6. "நெய்த்தானம் பூந்துருத்தி நேர்கண்டி வேதிகுடி துய்த்தார் சேர் சோற்றுத் துறைபழனம் மெய்த்தான மான திரு வையா றதனோ டெழுதலங்கள் மான திரு மத்தன் மனை. விஷ்ணு ஸ்தலங்களில் பிரதானமானவை:- ஸ்ரீ பார்த்தசாரதி சன்னதி, காஞ்சி வரதராஜ சன்னதி, திருவெவ்வுளூர், ஸ்ரீ பெரும்புதூர், திருப்பதி வேங்கடாசல சுவாமி, சோழங்கிபுரம், ஸ்ரீரங்கம், உறையூர், வானமாமலை, ஸ்ரீ வில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி, இராஜமன்னார் கோயில், கும்பகோணம், ஜனார்த்தனம், சிங்கப்பெருமாள் கோயில், ஸ்ரீவைகுந்தம், திருநாராயணபுரம், திருவநந்தபுரம், அஹோபிலம், திருக்கோயிலூர், திருக்கோட்டியூர் முதலானவைகளாம். மங்களாசாசனத் தொகுதி. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டாடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய பத்து ஆழ்வார்கள், ஆண்டாள் ஆகிய இப்பதினொருவரால் மங்களாசாசனம் பெற்றவை 108 திவ்விய தேசங்கள். ஆனால் இந்த 108 ஸ்தலங்களுள் 70 ஸ்தலங்களுக்குத்தான் பதிகங்களிருக்கின்றன. மற்ற ஸ்தலங்களுக்குத் தனிப்பதிகங்களில்லை. ஆயினும், "வானி ளவாக வைகுந்தக் குட்டன் வாசு தேவன் மதுரை மன்னன்" இந்தப் பாசுரம் வைகுந்தத்துக்கும் வடமதுரைக்கும் ஓதியதாக எடுத்துக்கொள்கின்றனர். இப்படியே ஆங்காங்கு வரும் பாடல்களுக்கு இவ்விதம் பொருள் கொண்டு 108 ஸ்தலங்களுக்கும் ஆழ்வார்கள் பாடலை அமர்த்தியிருக்கின்றனர். மேற்சொல்லிய பதினொருவரால் ஒரு தலமும், பதின்மரால் ஒரு தலமும், எழுவரால் ஒருதலமும், ஐவரால் நான்கு ஸ்தலங்களும், நால்வரால் ஏழு ஸ்தலங்களும், மூவரால் ஒரு ஸ்தலமும், இருவரால் இருபத்தொரு ஸ்தலங்களும், ஒருவரால் எழுபத்திரண்டு ஸ்தலங்களும், ஆக நூற்றெட்டு ஸ்தலங்களும் மங்களாசாசனம் பெற்றிருக்கின்றன. கோயமுத்தார் கலாநிதி ஆச்சிரமம். இங்ஙனம் செ.ப. நரசிம்மலு நாயுடு