பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முகவுரை ணாமலை, திருத்தணிகை, ஸ்ரீ ஜம்புகேஸ்வரம், தஞ்சை பிருகுதீஸ்வரர், திருவையாறு, சிதம்பரம், மதுரை மீனாட்சி சொக்கநாதர், பழனி, நஞ்சன்குடி, இராமேஸ்வரம், திருக்கழுக்குன்றம் முதலானவைகளாம். இச்சிவஸ்தலங்களைப்பற்றிப் பின்வரும் கவிகளை படிக்க விவரமாகும். திருவெண்காட்டுப் புராணத்தில் அடியிற் கண்டபடி சொல்லப்பட்டிருக்கின்றன. சிவஸ்தல சம்பந்தமான பாடல்கள். 1. "தில்லைவனங் காசி திருவாரூர் மாயூரம் முல்லைவனங் கூடல் முதுகுன்றம் நெல்லைகளர் காஞ்சிகழக் குன்றமறைக் காடருணை காளத்தி வாஞ்சியமென் முத்தி வரும்." 2. "தெரிசனஞ்செயத் தில்லையிற் கமலையிற் செனிக்க மரண மாய்விடக் கங்கைசூழ் வாரணாசியிலே அருணை மாநகர் நினைத்திட முத்தியஞ் செழுத்தும் பிரணவத்தொடெம் பேர்களு முரைக்கிலும் பெறலாம்." பாண்டிநாட்டு ஸ்தலங்கள். 3. "கூடல் புனவாயில் குற்றாலம் ஆப்பனூர் ஏடக நெல்வேலி யிராமேசம்--ஆடானை தென்பரங்குன் றஞ்சுழியல் தென் திருப்புத் தூர்கானை வன்கொடுங்குன் றம்பூ வணம். அஷ்டவீரட்டங்கள். 4. "பூமன் சிரங்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர் காமன் குறுக்கை, யமன் கட வூர், இந்தக் காசினியில் தேமன்னு கொன்றையு நதிகளுஞ் சூடி தன் சேவகமே." சப்தவிடங்க ஸ்தலங்கள். 5. "சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு காரார் மறைக்காடு காறாயில் - பேரான ஒத்ததிரு வாய்மூர் உவந்த திருக் கோளிலி சத்த விடங்கத் தலம்."