பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முகவுரை அருங்கா விரிக்குத் தென்கரையி லுறையூரு மான தஞ்சை கண்டியூர் குடந்தையழுந் தூரே." "சிறுபுலியூர் தலைச்சங்க நாண்மதியம் நறையூர் திருவாழும் விண்ணகரம் கண்ணபுரம் நாகை விலாக் கண்ணங்குடி திருக்கண்ண மங்கை மாதவர்வாழ் திருச்சேறை யுடனொருபா னான்கே இறுதியிலாப் பாண்டி வள நன்னாட்டி வியம்பில் எழில் சேருந் திருமெய்யம் திருக்கோட்டி யூரோ இறுதிதரும் புல்லாணி திருமாலிருஞ் சோலை உயர் திருமோ கூர்கூடல் திருத்தண்கா லூரே." "பதிதசைப்பா வன ராக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் பாங்குளவை குத்தந்தொலை வில்லிமங் கலமும் கதியருளும் வரகுணமங் கைப்புளிங் குடியும் காசினியிற் புகழ்பெற்ற திருக்குடந்தை நகரும் மதிதவழுந் தென் திருப் பேரை திருக் கோளூர் மார னுதித்த திருக்குருகர் வரமங்கை நிதியளிக்கும் குறுங்குடி யோ சொன்பா னாகும் நீள்வரை நாட்டுத்தலங்கள் நிகழ்த்திடுவன் மாதோ." "திருவனந்தபுரத்துடனே திருவண்பரி சாரம் தேற்று திருக் காட்கரையுந் திருமூழிக் களமே திருப்புலியூர் திருச்செங்குன் றூர் திருநா வாயே திருவல்ல வாழ் திருவண் வண்டூர் வாட்டாறு திருவிற்று வக் கோடு தேறுகடித் தானம் தேடரிய வாறன்விளை யோடொருபான் மூன்றே மருவினிய வெழுதாட்டி வாழ்வாரா தியரால் மங்கள சா சனம் பெற்ற தல நூற்றி யெட்டே." மேற்கண்ட கவிகளால் விஷ்ணுஸ்தலங்கள் 108 என ஸ்பஷ்டமாகும். வேறு சில கிரந்தங்களில் பின்னும் பல ஸ்தலங்களிருப்பதாகச் சொல்லப் பெற்றிருக்கின்றன. கால பேதத்தினால் சில ஸ்தலங்கள் மறைந்தும் சில ஸ்தலங்கள் அதிகரித்தும் இருக்கினும் இப்போது இத்தென் தேசத்தில் அடியிற்கண்ட சைவ வைணவ ஸ்தலங்களே பிரதானமானவைகளென்று கொண்டாடுகிறார்கள். சைவ ஸ்தலங்களில் பிரதானமானவை:- திருவொற்றியூர், திருவேகம்பம் அல்லது காஞ்சி, சீகாளத்தி, திருவண்