பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்முகம்

௧௫

நாழிகைக்கு நாழிகை ஜனத்திரள் மேன்மேலும் அதிகமாகும். அடர்ந்த காடுகளூடாகவும் மலைச் சிகரங்களுக்கு நடுவாகவும் அநேக நடைவழிகள் அங்கே வருவதற்கு உண்டு. ஆதலால் நானா திக்கிலுமிருந்து பல பாதையாலும் ஜனங்கள் இறங்கிவந்தவண்ணமே இருப்பார்கள். யாத்திரை வருபவர்கள் "நாராயணா! ஓ நாராயணா!" என்று கூவ, மலை முழுவதிலும் உள்ளவர்களெல்லாம் அதை எடுத்துச் சொல்ல, பின்னே வரும் கூட்டங்களும் அதையே கூற, நாராயண சப்தமே எங்கும் வியாபித்து அதிர்த்து ஒவிக்கும். ஆற்றின் அடி பற்றினைச் சூழ நான்கு பக்கமும் கல்லினால் அணை கட்டியிருக்கிறது. அதிலிருந்து ஜலம் முப்படிச் சதுரமுள்ள ஒரு குளத்தில் இரண்டரையடி மட்டத்திற்குத் தண்ணீர் எப்பொழுதும் நிறைந்திருக்கும். அதற்குப் பக்கத்தில் கணபதீசுவரருக்குப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு சிறிய சதுராலயம் உளது. தீர்த்தம் முகூர்த்தம் வந்த அளவில், அது எப்போது வரும் எப்போது வருமென்று ஆவலோடு காத்திருந்த ஜனங்களுக்கு ஆசாரியர் சைகை காட்டுவர். உடனே இளையோரும் முதியோருமாகிய ஆண் பெண் அனைவரும் தாறுமாறாய் ஒருவரோடு ஒருவர் இடிபட நெருங்கி ஓடி, தீர்த்தத்தில் இறங்கி, மும்முறை மூழ்கி மும்முறை ஆசமனம்பண்ணி எழுந்து, கோயில் வாசலில் உட்கார்ந்திருக்கும் ஆசாரியரை வணங்கி ஏதோ தக்ஷினை நல்குவார். அவ்வாறு வணங்கினோர் அனைவர் தலையிலேயும் ஆசாரியர் தீர்த்தம் புபோக்ஷத்து ஆசீர்வதிப்பார். அவ்விடம் விட்டு அகலுமுன் அவர்களில் அநேகர் நாடி புடைய கோர் வாடிக்கண்டிலே அந்தத் தீர்த்தத்தில் சிறிது ஜலம் எடுத்து அடைத்துத் தமது வீட்டார் இனத்தாருக்குக் கொண்டுபோய்க் கொடுப்பர். தீர்த்தமாடப்போகாது வீட்டிலிருப்போரும் குடகுநாட்டிலே அன்றைய தினத்தை ஒரு பொருளாகக் கொண்டாடி ஆசரிப்பார். அரிசிமாவிலே வாழைப்பழம் கலந்து பிசைந்து தோசை சுட்டு, சில தோசையை நெற்கழனிகளிற் கொண்டுபோய், காவிரிக்குக் காணிக்கையாகக் கோல்களிற் கோத்து நிறுத்திவைப்பார். மிகுந்த தோசையையே அன்றைக்கு வீட்டில் யாவரும் ஆகாரமாக உண்பது. அத்தினத்தில் யாவரும் ஒரு லெளகீகவேலையும் செய்வதில்லை. அநேக கிருகங்களில் பசுவிற்குத் தோத்திரமாகக் கோவின் கதை ஓதப்படும். அக்கதையை இங்கே சுருக்கிச் சொல்வோம். முன் ஒருகாலத்தில் காட்டி