பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க௬

நூன்முகம்

லே பசுக்கூட்டம் ஒன்று புல் மேய்ந்து கொண்டு இருக்கும்போது கூட்டம் முழுதும் பயந்து திகிலடைய, ஒரு வேங்கைப்புலி வந்து பசுக்களுக்கிடையிலே பாய்ந்து விழுந்தது. பயம் அதிகரித்துத் தடுமாறி, அவை அனைத்தும் போன போன திசையிலே ஓடிவிட, ஒரு பசுமாத்திரம் புலி வாயில் அகப்பட்டுக்கொண்டது. அப்பசு மனோதிடத்துடன் புலியை நோக்கி 'நீ என்னைத் தின்ன விரும்பினாய். அப்படியே செய். ஒருகணப்பொழுது எனக்கு விடைகொடு, நான் என் கன்றினிடம் போய், கடைசியாய் அது என் பால் உண்ணுமாறு ஊட்டி, அதைப் பார்த்துக் கொள்ளும்படிக்கு என் சிநேகிதரிடம் ஒப்புவித்து வருகிறேன்' என்றது. புலி தன் வாய்க்கு இரையாய் அகப்பட்ட பசு பேசிய தைரியத்தைப் பார்த்து அதிசயமுற்று, சற்றே மனம் இரங்கி, கன்றுக்குப் போய்ப் பால் அருத்தி ஒழுங்கு செய்தவுடனே அது மீளவும் தன்னிடம் வருகிறதாகச் சத்தியம் பண்ணித் தரும்படி கேட்டது. 'சிறிது பொழுதில் மீள்வேன்' என்று காவிரி நதியின் பேரில் ஆணையிட்டுக்கொடுத்து, பசு தனது கன்றினிடம் போயிற்று. போய்க் கன்றுக்குப் பாலூட்டி, தன்னிடம் நண்புள்ள சில பசுக்கள் வசம் கன்றை ஒப்புவித்து, இது பால் குடிக்கும்படிப் பின்புறமாய் வந்தால் காலால் உதைக்காமலும் முன்புறமாய் வரின் கொம்பால் முட்டாமலும் இருக்கும்படி அவைகளை வேண்டிக்கொண்டு, புலியிடம் போகத் திரும்பிற்று. அப்பொழுது மற்றைப் பசுக்கள் அதனைப் 'போகவேண்டாம்' என்று மிக இரந்து வேண்டியும், அது 'காவேரியின் பேரால் செய்த சத்தியத்தை மீறுவதிலும் சாதலே மேலானது' என்று சொல்லி, புலியின் பால் வந்து, தான் இப்படித் தாமதம் செய்து அதனை அதுகாறும் பசியாயிருக்கவைத்ததைப்பற்றித் தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டது. இவ்வளவு யோக்கியமும் சற்குணமும் உள்ள ஆவினது சன்னிதியில் புலிக்கு பயம் மேவிட்டது. முன் செய்த கொடுமைகள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக அணி அணியாய் ஒரு சங்கிலிக்கோவைபோல அப்புவியின் மனத்தில் தோன்றின. தான் கொன்று தின்ற பசுத்தொகை முற்றும் அதன் ஞாபகத்தில் வரலாயிற்று. சன்மார்க்கமே உருவாகக் கொண்டு ஜன்மம் எடுத்தாற்போன்ற இப்பாவை வதைத்தால் தன் பாவங்கள் ஒரு வழியாலும் பரிகரிக்கப்படா என்று சொல்லி, அக்கொடிய புலி பசுவை மறுபடியும் அதன் கன்றினிடம் போகுமாறு உத்தரவு செய்து