பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ந ன் முகம் கா தன் உடம்பின் வலியெல்லாம் சேர்த்து மேனோக்கி ஆகாயத் தில் உயாப்பாய்ந்து, அப் பசுவின் பாதத்திலே விழுந்து இறந்தது' என்று ஒரு கதை சொல்லப்பட்டு வருகின்றது. இதனால் இக் காவிரிந்தியின் மகத்துவம் ஸ்பஷ்டமாகும். தலைக்காவேரிக்கருகிவிருக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்தலம். தலைக்காவேரியிலிருந்து காட்டு மார்க்கமாய்ச் சுமார் 35 மைல்கள் தூரத்திலும் அங்கிருந்து வண்டி மார்க்கமாக 50 மைல்கள் தூரத்திலும் இந்த சுப்பிரமணியர் கோயிலிருக் கின்றது. இக் கோயிலைச் சுற்றிலும் பயங்கரமான வனங்க ளும் காடுகளும் இருக்கின்றன. அவைகளிலிருந்து வடிந்து வரும் சாருணந்தி இக்கோயிலைச் சுற்றி யோடுகின்ற தர. இந்தக் கோயில் பிராகாரத்திற்குள்ளாக அநேகர் வந்து சந் தர்ப்பணம் செய்து போகிறார்கள். பஞ்சவடியைப் போல இங்கு அநேக பிராமணர்கள் வந்து சுப காலக்ஷேபம் செய் கிறார்கள். இது தபசு செய்வோர்களுக்குச் சிறந்த ஸ்தல மென்று சொல்லலாம். காவிரி நதியின் தற்கால ஸ்திதியும் உபயோகமும். இந்தக் காவிரியானது குடகு நாட்டில் உற்பத்தியானா லும் அதன் ஜலம் அந்த காட்டின் பயிர் பச்சைகளுக்கு விசேஷமாக உபயோகப்படுகிறதில்லை. பிறகு அது மைசூர் இராஜாங்கத்தில் பிரவேசித்து வரும்போது அந்த இராஜாங்கத்தாரால் அதற்குச் சுமார் 12 அணைகள் கட்டப் பட்டும், அவைகளால் தேக்கப்பட்ட ஜலத்தைச் சுமார் 1,12,000 ஏகரா நிலத்திற்குப் பாய்ச்சப்பட்டும், அதனால் அந்த இராஜாங்கத்தாருக்குப் பிரதிu 7 க்ஷம் ரூபாய் வருமானத்தைத் தருகிறது. பிறகு இந்தக் காவிரியானது சிவசமுத்திரத்திற் கரு கில் இங்கிலீஷ் இராஜாங்கத்தில் பிரவேசித்து, கோயமுத் தூர் சேலம் ஜில்லாக்களுக்கு எல்லையாக ஓடினாலும் அவ விரண்டு ஜில்லாக்களும் மேட்டுப்பாங்கான நிலமானபடி யால் அந்த நதியின் ஜலம் உபயோகப்படுகிறதில்லை.