பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கஅ

நூன்முகம்

பிறகு இந்த நதியானது பவானி அமராவதி மணி முத்தாறு முதலான கிளை நதிகளின் ஜலத்தைப் பெற்று பல்கிப் பெருகி, மோகனூர்க்கருகில் அகண்ட காவிரி என்னும் பெயரைப் பெற்றுத் திரிசிராப்பள்ளி ஜில்லாவைச் சார்ந்த எலமனூர் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சில பர்லாங்கு தூரத்தில் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து வடபிரிவு காவிரி என்னும் பெயராலும் - இடபிரிவு கொள்ளிடம் என்னும் பெயராலும் ஓடி, திருச்சி-தஞ்சை-தென் ஆற்காடு ஜில்லாக்களின் 90,000 ஏக்ரா நிலத்திற்கும், பிரான்சு கவர்ன்மெண்டு இலாகாவில் 27,000 ஏக்ரா நிலத்திற்கும் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.

எப்படியெனில், இந்தக் காவிரியானது இப்படிப் பிரியுமிடத்தில் ஒரு மேலணையானது கட்டப்பெற்றிருக்கிறது. இந்த அணைக்குக் கீழே சுமார் 15 மைல்கள் தூரத்திலும் திருவரம்பூர் ஸ்டேஷனுக்கு ஐந்து மைல்கள் தூரத்திலும் பூர்வத்தில் ஒரு சோழராஜனால் கட்டப்பெற்ற பெரிய அணை இருக்கிறது. மேலே சொன்ன மேலணைக்கும் இந்தப் பெரிய அணைக்கும் இடையில் காவிரியின் ஜலமானது பல வாய்க்கால்களின் வழியாய் வெள்ளாறோடு சேர்ந்து பலவிடங்களுக்கும் நீர் பாய்ச்ச 63 அடிகள் உயரமும் 55 மதகுகளுடன் 1830 ௵ சர் ஆர்தர் காட்டன் என்பவரால் கட்டப்பட்டிருக்கின்றன. இதற்குக் கீழே சுமார் 60 மைல்கள் தூரத்தில் ஒரு கீழணை கட்டப்பட்டு அங்கு தேக்கும் ஜலம் கொள்ளிடத்தின் இடது பாகத்தில் 1,10,000 ஏக்ரா நிலத்திற்குப் பாய்ச்சப்படுகிறது. காவிரியின் வலது பக்கத்துக் கால்வாய்களின் ஜலத்தினால் சீகாழி தாலுக்காவில் சுமார் 24.000 ஏக்ரா நிலம் பாய்ச்சப்படுகிறதும் அன்றியில் இடது பக்கத்து வாய்க்கால்களின் ஜலம் வீரானமென்னும் பெரிய குளத்தில் விழுந்து அதற்கருகிலிருக்கும் சுமார் 50,000 ஏக்ரா நிலத்திற்குப் பாய்ச்சப்படுவதோடு அருகிலிருக்கும் சத்திய தோப்புக்குப் பக்கத்தில் சுமார் 35000 ஏக்ரா நிலத்திற்குப் பாய்ச்சப்படுகிறது. இத்யாதி விவரங்களினால் இந்தக் காவிரியின் ஜலமானது சுமார் 11,34,000 ஏக்ரா அதாவது சற்றேறக்குறைய 12 லக்ஷம் ஏக்ரா நிலத்திற்குப் பாய்ந்து லக்ஷக்கணக்கான குடிகளைக் காப்பாற்றி வருவதோடு கவர்ன்மெண்டாருக்கும் அதிக வருமானத்தைக் கொடுத்துவருகிறது. இந்தக்