பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நூன்முகம் காவிரியின் ஜலம் இப்படிச் செலவாகிவிடச் சீகாழிக்கடுத்த காவிரிப்பட்டணம் அல்லது காவிரி சமுத்திர சங்கமத்தில் ஒரு சிறு சாக்கடைபோல் ஓடி சமுத்திரத்தில் விழுகிறது. இப்படி உபயோகமாகும் காவிரியின் ஜலத்தை இப்போது மைசூர் ராஜாங்கத்தார் கண்ணம்பாடி என்னும் இடத்தில் சுமார் 15,000,000 ரூபாய் செலவில் ஒரு பெரிய அணை யைக் கட்டி, 3700 கோடி கன அடி ஜலத்தைத் தேக்கி அத னால் மின்சார சக்தி பெற்று அச் சக்கியை கோலார் முத வான விடங்களிலுள்ள பொன் சாங்கங்களுக்கு உபயோகப் படுத்தி, அந்தத் தேக்கமான தண்ணீரினால் ஏராளமான ஏக்ரா பூமிக்குப் பாய்ச்சிப் பயிரிடப் போகிறார்கள். இதன் விவரம் இதனடியில் காணலாம். காவிரியின் கண்ணம்பாடி நீர்த்தேக்கம். மைசூர் சமஸ்தானத்தில் கண்ணம்பாடி என்கிற இடத் தில் மைசூர் கவர்ன்மெண்டார் கட்டி வரும் நீர்த்தேக்கத் தைப்பற்றி அதன் சாராம்சத்தை இங்குப் பதிப்பிக்கிறோம். காவிரியாற்றின் நீரைத் தேக்குவதற்காகக் கண்ணம் பாடியில் மைசூர் கவர்ன் மெண்டார் கட்டிவரும் பெரிய தேக்கத்தைப்பற்றி அந்த கவர்ன்மெண்டுக்கும் சென்னை கவர்ன்மெண்டுக்கு முள்ள விவாதத்தைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் செய்த தீர்ப்பை இந்தியா கவர்ன்மெண்டின் அனுமதியைப் பெற்ற பிறகு பகிரங்கப் படுத்துவதாகச் சென்னை கவர்ன்மெண்டார் யோசித்துக் கொண்டிருக்கிறார்க ளென்று சமீபத்தில் உதகமண்ட லத்திலிருந்து வந்த தந்தி சமாச்சார மொன்றால் தெரிந் தது. முக்கியமான எல்லா தஸ்தாவேஜிகளையும் வெளி யிடுவார்க ளென்று நம்புவோம். சென்னை மாகாணத்தின் நீர்ப்பாய்ச்சல் வசதிக்கும் பிரஸ்தாப அணைக்கு மிருக்கும் சம்பந்தத்தை உத்தேசித்து, அந்தப் பிரமாண்டமான வேலையின் முக்கியாம்சங்களையும், இரண்டு கவர்ன்மெண் டுக்குமுள்ள தகராறுகளையும், அந்த வேலையையும் மத்யஸ் தரின் தீர்ப்பையும் பற்றித் தஞ்சாவூர் திரிசிராப்பள்ளி மிராசு தார்களுக்குத் தெரிவிக்கவேண்டிய முக்கிய அம்சங் கள் என்ன வென்பதையும் இன்னொரு தடவை எடுத்துச் சொல்வது பொருத்தமாக விருக்கும். தீர்ப்பின் மேல்