பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம் தோலும் எலும்புமாகத் தோன்றும் அத்தபோதிதி, தம் நாட்டில் துருக்கர் புகுந்து தேவாலயங்களையும், மடால. பங்களையும், விக்கிரகங்களையும், வீடுகளையும் உடைத்துக் கொள்ளையிட்டும், குடிகளைக் குரூரமாக நடத்திவருவதை யுக் கண்டு சகியாமல், சதா அழுத கண்ணும் சிந்திய மூக் குடனும் சிவனைத் தியானித்தும், தமது சீடர்களுக்குச் சிவபக்சி சீலத்தையும், தேசாபிமானத்தையும் போ இப்ப தைக் கண்டும் கேட்ட ஹரிஹரனுக்கும் புக்கனுக்கும் அவ படத்தில் அக்யந்த விசுவாச முண்டாகி, அவர் பாதத்தில் அடைக்கலமாக விழுந்ததைக் கண்டு, அந்த வேத்தா அவர் களை ஆசீர்வதித்து, "நீங்களாப்பா? எங்கிருந்து வந்தீர் கன்?" என்று வினவ, அந்த ஹரி ஹானும், புக்கனும் தாம் பிறந்தது முதல் அங்கு வந்தவரையில் நடந்த விருத்தாந்தன் களை யெல்லாம் சவிஸ் காரமாகச் சொல்லக்கேட்டு, ஆனைகும் திக்கு உண்டான கஷ்டத்தைக் கருதி அழுது, அந்தோ ! அந்தப் பட்டணத்திலும் இருக்கர் புகுந்து தும்சம் செய்த தற்குத் துக்கப்பட்டும், இனி அந்தப் பட்டணத்துக்குத் தாம் வந்து குடிகளுக்கு நன்மை செய்யச் சித்தமாக இரு ப்பதாகவும் சொன்னார். வித்தியா நகரம் என்னும் விஜய நகரம் உண்டான விதம். அம்முனிவர் அப்படிச் சொன்னாலும் என்ன? அப் போது ஓரங்கல்நாடு முதல் ஆனைகுந்தி வரைக்கும் இடைக் ைெட மகமதியர் சேனைகள் தங்கி, வழிப்போக்கர்களை மரி த்து உதைத்துக் கொள்ளையடித்துக் கொலை புரிந்து வந்தபடி பால், ஒரூரிலிருந்து அடுத்த ஊருக்கு உயிருடன் போய்ச் சேர்வது கஷ்டசாத்தியமாக இருந்தது. ஆகவே, அந்த வித் தியாரண்ணிய சுவாமிகளை ஒரு பிரேதம்போல் வேஷமிட் டும், ஒரு பாடையில் படுக்கவைத்தும், அவரை அவர் சீடர் களில் சிலரும், ஹரிஹரன் புக்கன் முதலானவர்களும் மாறுவேடம் தரித்துத் தூக்கிக்கொண்டு ஆனைகுந்திவழியே பிணக்கோலமாகப் போய்த் துங்கபத்திராகதிதீரத்தில் வர் திறக்கினார்கள். அவ்விடம் சிறு முயற்குட்டி ஒன்று ஒரு பெரிய சின் கத்தைத் துரத்திக்கொண்டு போவதை வித்தியாரண்ணியர்