பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு. 155 பார்த்து “என்ன ஒரு சிறு முயல் சிங்கத்தை எதிர்த்துச் சண்டை செய்யுமாகில், இந்த இடம் எப்படிப்பட்ட வீரர்கள் குடியிருந்த விடமாக விருக்கவேண்டும்! இதுவன்றோ வீர தீரர்கள் வசிக்கத் தக்கவிடம்!" என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டு, அருகில் ஒரு மலையின் மேல் விருபாக்ஷ சிவ ஸ் தலமிருக்கக் கண்டு போய் உள்ளே நுழைந்து அங்குள்ள புவனேசுவரி சுவாமியைத் தியானித்தும், அந்தக் கோயி இலக் கட்டியவர்கள் யாவரென்று அருகில் நின்ற அர்ச்சகனை வினவ, அவ்வர்ச்சகர், அம்முனி சிரேஷ்டரை நோக்கி 'ஏ! எ தீந்திரா! ஸ்ரீமத் ராமாயணத்தில் கண்ட சுக்கிரீவன் இந்த மலைமீது ஏறிச் சுவாமியைத் தரிசிக்கையில், வாலியும் அவனைத் தொடர்ந்து வந்து தன்னாலான மட்டும் ஏறிப்போக முயன்றும் முடியாமல் போய்விட்டான். இதைச் சுற்றிலும் மாலவதம், ஏமகூடம், பசுவசிரங்கம், மதங்க பருவதம், கிஷ் கிந்தம் என்னும் ஐந்து பருவதப் பிரதேசங்க ளிருக்கின் றன. இங்குதான் ஹம்பிஸ்தலமு மிருக்கிறது, இவைகளைச் சாக்ஷரத் தசரதராமர் கட்டித் தரிசித்தது முதல் அநேக தபோதி திகள் வந்து வனசஞ்சாரிகளாகித் தவஞ்செய்து சர் வேசுவரனை அடைந்தார்கள்' என்று சொல்லவே, அந்த வித்தியாரண்ணியருக்கு இவை யாவும் ஞான திருஷ்டியினா லும் உண்மையாகவே தோன்றியதன் மேல், இப்படிப்பட்ட ஸ்தலத்தில் தாமும் தம் உயிர் உள்ள நாள் வசையில் காலம் போக்கக் கருதியும், அவ்விடத்தில் அஷ்ட ஐசுவரியங்க ளும் திரண்டுவந்த அழகிய நகாமொன்றை உண்டாக்கித் தரவேண்டுமென்றும், தமது இஷ்ட தேவதையாகிய அஷ்ட லஷ்மியைத் தியானித்தார். அப்படி தியானித்துக் கொண்டிருக்கும்போது, அம் முனி புங்கவருடைய சீடர்களான ஹரி ஹரன் புக்கன் முதி லானவர்கள் வேறுவேடந் தரித்து ஆனைகுந்திக்குள் போய்ப் பார்க்க, அவ்விடத்திய கோயில் கோபுரங்களும், கோட்டை கொத்தளங்களும் இடிந்து குட்டிச்சுவர்களாக நிற்கவும், அந்நகரத்தில் உள்ள ஜனங்கள் எல்லாரும் நாலாபக்கங்களில் வலசைப்போய் ஒரு காட்டைப்போவிருப்பதையும் கண்டு பரி தவித்து, தம் தபோதி தியினிடம் திரும்பிவருகையில், வழியில் ஓர் தாடகத்தைக் கண்டு தண்ணீர் குடிக்க இறங்கி னார்கள். அங்கு ஒரு குகை இருக்கக்கண்டு அதற்குள் புக் கன் பிரவேசித்துப் பார்க்க, தங்கக் கம்பங்களும், தகடு