பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்முகம்

உக

மம் வரையில் மைசூர் நாட்டுக்கும் சென்னை மாகாண ஜில்லாக்களுக்கும் எல்லையாக 30 மைல் தூரம் ஓடுகிறது. கண்ணம்பாடிக்குச் சற்று மேலாக ஹேமவதியும் லட்சுமண தீர்த்தமும் காவிரியில் கலக்கின்றன. அவ்விரண்டாறுகளும், காவிரியைப் போலவே மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன. அந்த இரண்டு நதிகளும் காவிரியுடன் சங்கமமாகும் இடத்துக்குக் கீழ் எடத்தூரிலிருந்துதான் பிரஸ்தாபத் தேக்கம் ஏற்படும். அதற்கு ஆதரவாகக் கண்ணம்பாடியில் குறுக்கணை ஒன்று ஏற்படும். குறுக்கணைக்குத் தெற்காக ஒரு சுவர் கட்டப்படும். அதிலுள்ள துவாரங்களின் வழியாகவும் அதன் மேல் வழிந்தும் தேக்கம் நிறைந்த பிறகு அதிக ஜலமானது வெளிப்படவேண்டும். சிவசமுத்திரத்திலிருந்து கண்ணம்பாடி 50 மைல் தூரத்திலிருக்கிறது. எடத்தூரிலிருந்து ஆற்றின் கரையோடு சென்றால் 9 மைல் தூரத்திலிருக்கிறது. மைசூர் நாட்டிலுள்ள மலை நாடு என்ற பிராந்தியத்தில் பெய்யும் மழை எல்லாம் காவிரியில்தான் விழுகிறது. அங்கு மழைத்தட்டு ஏற்படுகிறதே இல்லை. ஆகையால், மற்ற இடங்களில் மழை தட்டும்போதுகூட அங்கு மழை பெய்யுமாகையால், ஜூன்௴ மத்தியிலிருந்து அக்டோபர் ஆரம்பிக்கும் வரையில் ஆற்றில் வெள்ளம் ஓடிக்கொண்டேயிருக்கும்.

காவிரியில் வருஷம் முழுமையும் நீரோட்டமுண்டு. ஜூன் மாத மத்தியில் குடகில் மழை பெய்ய ஆரம்பிப்பது முதல் ஜூலை முடிய ஆற்றில் வெள்ளம் பெருகிக் கொண்டேயிருக்கும். இந்த வெள்ளம் அநேகமாக ஆகஸ்டு மாதம் முடியவும் நிற்கும். அதிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக வெள்ளம் குறையும். ஐப்பசி மாதத்திய மழை ஆரம்பித்தவுடனே மறுபடியும் ஆற்று நீர் பெருகி, அக்டோபர், நவம்பர் முடிய ஓடும். அது முதல் சிறுகச் சிறுகக் குறைந்து ஏப்ரல் மாதத்தில் மிகக் கம்மிப்பட்டுப் போகிறது. மைசூர் சமஸ்தானத்திலும் ப்ரிட்டிஷ் ஜில்லாக்களிலும் பாய்ச்சலுக்காக உபயோகித்ததுபோக, பாக்கி வெள்ளமெல்லாம் கடலில் வடிந்து விடுகிறது. திரிசிராப்பள்ளிக்கு 10 மைல் மேற்கிலுள்ள மேல் அணை வழியாக வருஷமொன்றுக்குச் சராசரி நாலாயிரம் லட்சம் கன அடி முதல் ஆறாயிரம் லட்சம் கன அடி வரையில் ஜலம் செல்லுகிறது. (ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம், ஒரு அடி உயரம் கொண்டதற்கு