பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உஉ

நூன்முகம்

கன அடி என்று பெயர்) இதில் இரண்டாயிரம் லட்சம் கன அடி ஜலமே பாய்ச்சலுக்காக உபயோகப்படுகிறது. பாக்கி வீணாகக் கடலுக்குப் போய் சேருகிறது. நீர்த்தேக்கம் எற்படும் இடத்தைச் சுற்றி 4100 சதுரமைல் விஸ்தீரணமுள்ள பூமியில் பெய்யும் மழையெல்லாம் காவிரி ஆற்றில்தான் வடிகிறது.

ஆறு ஏற்பட்டிருக்கும் இடமானது பாய்ச்சலுக்கும் மின்சார உற்பத்திக்கும் மிகப் பொருத்தமாகவிருக்கிறது. "அணைகளையும் வாய்க்கால்களையும்கொண்டு எவ்வளவோ காலமாக ஆற்று நீரைப் பாய்ச்சலுக்கு உபயோகப்படுத்திவந்திருக்கிறார்கள். அணைக்கட்டுகள் தாழ்ந்திருப்பதால், அவைகளைக்கொண்டு ஜலத்தைத் தேக்கவே முடியவில்லை. வாய்க்கால்களில் எதுவும் விசேஷ நீளமுள்ளதல்ல. அல்லாமலும் ஆற்றைச் சேர்ந்தாற்போலவே வாய்க்கால்கள் ஓடுகிறபடியால், ஆற்றுக்கும் அவைகளுக்குமிடையிலுள்ள மிகக் குறுகலான பூமியின் நீர்ப் பாய்ச்சலுக்கே உதவுகின்றன. இப்பொழுது ஒரு லட்சத்து எண்ணாயிரம் ஏக்ரா பூமியில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அந்நிலங்களுக்கு ஜூன் முதல் ஜனவரி வரையில் நீர் வேண்டும். இன்னும் அதிக பூமியைச் சாகுபடி செய்யலாமென்றாலோ, ஆற்று நீர் போதவில்லை; அல்லாமலும் சாகுபடி முடிவுகாலத்தில் ஜலம் ஒழுங்காய்க் கிடைக்கப் போகிறதுமில்லை என்று மைசூர் ரிபோர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.

காவிரிநீரை உபயோகித்தல்

சிவசமுத்திரம் என்ற இடத்தில் காவிரி நீரானது உயரவிருந்து திடீரென்று பள்ளத்தில் விழுகிறபடியால் 1902-ஆம் வருஷமுதல் அங்கு மின்சாரசக்தி உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. பதினோராயிரம் குதிரை சக்தியுள்ள மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, கோலார் தங்கச் சுரங்கங்களுக்கும் பெங்களூர் மைசூர் நகரங்களுக்கும் கொண்டுபோகப்படுகிறது. ஜலத்தட்டினால் பாய்ச்சலைக் காட்டிலும் மின்சார உற்பத்திக்குக் குந்தகம் ஏற்படக் கூடியதாயிருக்கிறதாம். ஒவ்வொரு கோடையிலும் அப்போதைக்கப்போது ஏதேனும் ஏற்பாடு செய்து ஆற்றோட்டத்தை அதிகப்படுத்த வேண்டியிருக்கிறதாம். மின்சார உற்பத்திக்குக் குந்தகம் ஏற்படாமல் பந்தோபஸ்து செய்ய