பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நான் முகம் வேண்டியது அதிக அவசியமாய்விட்டதால், பாய்ச்ச லாதா ரத்தைக்கூட அவ்வளவு முக்கியமாகக் கவனிக்கவில்லையாம். பாய்ச்சலுக்காகட்டும், மின்சார உற்பத்திக்காகட்டும் கா வேரி நீரை எவ்வளவு உபயோகிக்க முடியமோ அவ்வள வும் உபயோகப்படுத்தியாய்விட்டது. இப்பொழுதைக் காட் டிலும் அதிகமாகப் பிரயோஜனம் தேடுவதானால், பழைய வழியை விட்டுவிட்டு, வேறு வழியைத்தான் பின்பற்ற வேண்டிய தவசியமாம். புதுவழி யென்னவென்றால், நீரைத் தேக்கி வைக்கப் பெரியதோர் தேக்கமும், விஸ்தாரமான சமபூமிக்குப் பாயக்கூடிய வாய்க்கால்களும், கணக்குப்படி ஜலத்தை வினியோகம் செய்ய ஒரு ஏற்பாடும், மின்சாரசக்தி உற்பத் தியை அதிகப்படுத்திக்கொண்டே போசு ஒரு ஏற்பாடும் வேண்டும்; இவைகளே புதியவழியாகும்" என்று மிஸ்டர் விசுவேசுவரய்யா 1911-ம் வருஷத்தில் எழுகினார். ஆற்றின் நீரோட்டம் ஒரு ரீதியாயிருப்பதில்லை. மழைகாலத்தில் சிவசமுத்திரம் என்ற இடத்தில் ஒரு வினாடிப்போழுதில் ஆற்றில் 3 லட்சம் கன அடி ஜலா செல்லுகிறது. அருங் சோடையிலோ 100 கன அடிக்கும் குறைந்து விடுகிறது. ஆற்றில் சாதாரணமாக வரும் ஜலம் போதாம லிருக்கக் கூடிய காலத்தில் உதவும்படி வேண்டிய அளவு நீரைத் தேக்கி வைத்துக்கொண்டால், ஜாஸ்தி பூமியைச் சாகுபடி செய்யக்கூடிய துடன், மின்சார உற்பத்தியையும் அதிக மாக்கலாம். இந்த வேலைகளால் கவர்ன்மெண்டுக்கு உண் டாகக்கூடிய வாபம் ஒருபுறமிருக்க, சமஸ்தானத்தின் வியசாய விருத்தியையும் தொழில் விருத்தியையும் உத்தே சித்து மேற்கண்ட வேலைகளைச் செய்ய வேண்டியது மிக அவசியமாகிறது. என்று மைசூர் ரிபோர்ட்டில் சொல்லி யிருக்கிறது. மைசூர் வேலையின் திட்டம், உத்தேச வேலை முழுமைக்காகவும் 253 வட்சம் ரூபாய் 1911ரூபத்தில் மைசூர் கவர்ன் மெண்டால் சாங்க்ஷன் செய் யப்பட்டது. மைசூர் எக்ஸிகூடிவ் எஞ்சினீருடைய ரிபோர் ட்டில் கண்டபடி விபரங்கள் பின்வருமாறு: (1) ஆற்றின் மணல் மட்டத்துக்குமேல் 124 அடி உயாத்தில் ஒரு குறுக்கணை கட்டிவருகிறார்கள்.