பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். [2-ம் களையும், அவர்களுடைய கிரந்தங்களையும், கோயில் கோபுர விக்கிரகங்களையும் பாதுகாத்துப் பரிபாலித்து வந்தான். அவன் அப்படிப் பாதுகாத்து வந்ததற்குத் தார்வார், கன்ன டா, கோவா, மைசூர், பல்லாரி, கடப்பை, காஞ்சி, திரி சிராப்பள்ளி முதலான விடங்களில் அகப்பட்ட சாசனங்கள் இன்றும் சாக்ஷி பகருகின்றன. விஜயநகரத்தினுடைய போகங்களைக் கண்டு சகியாத கல்பர்கா சுல்தான் பெரோஜிஷா 1398-ம் வருஷம் சண் டைக்கு எத்தனிக்க, விஜயநகரத்தாரும் துங்கபத்திரா நதி யைக் கடந்து செயிச்சூர் டூவாபைப் பிடித்துக் கொண்டார் கள். பிறகு மகமதிய சேனை மஹா மூர்க்கத்தோடு விஜயாக எம்வரையில் வா, இருகக்ஷியாருக்கும் சமாதான முண்டாசி பது. அந்தக்காலத்தில் தக்ஷணத்திலும் கர்னாடகத்திலும் கடும்பஞ்சம் சம்பவித்து 12 வருஷகாலம் நீடித்து நாலாபக் கத்து நரசீவர்களை நாசமாக்கிவிட்டது. அக்காலத்தில் வட க்கே தாமர்லேன் படையெடுத்துவந்து இந்துக்களைத் துவம் சம்செய்து வருவதைக் கூல்பர்க்காவிலிருந்த பெரோஜிஷா கேட்டு அவன் உதவியைக்கொண்டு குஜராத்திலும், காண் டீஷிலும், கூடுமாகில் விஜயநகரத்திலும் இரண்டாந்தரம் சண்டை செய்யப் பிரயத்தனப்படுகையில், 1406-வருஷம் ஹரிஹரராயலு சுமார் 20 ஆண்டு இறந்தான். அவன் காலத்தில் செலாவணியாகிவந்த பொன் வெள்ளி செம்பு நாணயங்கள் இன்னும் அகப்படுகின்றன. அவன் கட்டு வித்த புதிய கோட்டை கொத்தளங்களும், கோயில் கோபு எங்களும், தருமசாலைகளும் இன்னும் அவன் பெயரைப் புகழுகின்றன. 1-வது தேவராயலு மெஸ்நானம். (கி. பி. 1406வரு முதல் 1416வரை.) Ne இரண்டாவது ஹரி ஹா ராயலுக்குப் பிறகு அவன் குமாரன் தேவராயலு 1406 நவம்பர்மீ சிங்காசன மேறினான். அவன் காலத்தில் குடிகளுக்குக் கஷ்டமே யொழிய இஷ்டலாபம் கிடையாமல் தவித்தார்கள். அப்படி ஆவதற்குக் காரணம், கூவ்பர்கா பெரோஜிஷா சமஸ்தானத் தைச் சேர்ந்த முடுகலகாட்டில் ஒரு குடியானவனுடைய அதிக அழகுடைய பெண்ணேயாம். அந்தப் பெண்ணின்