பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு. 167 சனாகிய புக்கனுடைய பராக்கிரமத்தை மெச்சி அச்சேனைத் தலைவன் பெயர் மறவாதிருக்கும் நிமித்தம் தமது மக்களில் கடைசி மகனுக்கு வைத்தான். அந்தச் சிறுவனும் தனது பெயருக்குத் தக்கபடி பராக்கிரமமுதலான குணங்களை உடை த்தாயிருந்தும், மலைவாசிகளுடைய தேனுக்கும் தினைமாவுக் கும் எதிர்பார்த்திருந்தபடியால் அப்பராக்கிரமத்தை உட னே அந்நியருக்குக் காட்ட வகையில்லை. ஆயினும், அவனை ஆசையோடு எடுத்துக் கொண்டுபோய் வளர்த்த தாதி யானவள் அம்மலை நாட்டில் அகப்பட்ட உபாத்தியாயாக ளிடத்தில் சுவல்ப கல்வியையும் மலைவாலிகளிடத்தில் மல் யுத்தம், வில்யுத்தத் தொழில்களையும் கற்பித்தும், காலம் முதிர, அந்தப் புக்கனுக்கு அம்மலை நாட்டில் வந்து வளரும் விருத்தாந்தத்னத எல்லாம் சாங்கோபாங்கமாகச் சொல்ல அவன் கேட்டு தனது விதிவசத்தை எண்ணித் துக்கப்பட் டும். அப்போது விஜயநகரத்தில் பிரபலமாக ஆண்டுவந்த புக்கராயலுக்கு தனது உண்மையான நிலைமையைச் சொன் னாலும் கால வித்தியாசத்தினால் காரிய சித்தியடைய வகை கயில்லை சான்றஞ்சியும், அந்தத் தாதியைத் தமது தாயாகப் பாவித்தும், அவள் சொற்படி நடந்தும், மலைசாரப் பிள்ளைக ளுக்குக் கல்வியைக் கற்பித்துக் கொண்டும், மலசருக்கு வேண்டிய வேட்டைகளாடியும், சொற்பப் பொருள் சம்பா பதித்தும் காலம் கழித்துவந்தான். அவனுக்குக் கிட்டத் தட்ட இருபது வயது ஆகவே, தாதியம்மாள் பார்த்து இனி அவனுக்குக் கலியாணம் செய்துவைக்க வேண்டுமே என்று கருதியும், இரவில் யாரிடமும் சொல்லாமலும், ஆனை குந்திக்குப்போயும், அங்கு நாபதி இராமராயலுடைய பூர்வ பந்துக்களில் அதிக ஏழைகளாக இருந்த ஒரு குடும்பத்தில் தான் நடத்திய இரகசியங்களை எல்லாம் சொல்லியும், புக்க னுக்கு அங்குள்ள ஓர் நல்ல பெண்ணைப் பார்த்து சம்மதப் படச் செய்வித்தும், அப் பெண்ணையும், அப்பெண் விட் பாளையம் இரகசியமாக இராக்காலங்களில் துளுவ நாட்டி ற்கு அழைத்து வந்தும், மலசர் சமுஹத்தில் மணம்செய் விக்க, அம்மலசர்கள், அந்த வாலிபப் புக்கராயலுடைய பூர்வசரித்திர த்தையும், அவனுக்கு அங்கு நடந்த விவாஹ வைபவத்தையும் கண்டு புதுவன் சாக்ஷாத் புராதன காபதி பூபராயலுடைய குமாரனென்று அறிந்து அவனை அந்தக் துளுவநாட்டிற்கு அரசனாகக்கொண்டு அவன் ஆக்கினைக் குள் அடங்கி வாழ்ந்து வந்தார்கள் அந்தப் புக்காரய லுடைய