பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு, 169 வது பக்கத்தில், விருபாக்ஷிராயலு சிற்றின்பத்தில் மூழ்கி துஷ்கிருத்தியங்களைச் செய்து வருவதைப்பற்றி அவன் முத்த குமாரன் அவனைக் கொலை செய்துவிட்டுத் தான் சிங்காசன மேற, அவனுடைய சகோதரனாகிய பிரவுட தேவராயன அந்த முத்தகுமாரனைக் கொலை செய்து பட்டம் கட்டிக் கொண்டதாகவும், அந்தப் பிரபுடதேவராயலும் திருப்திகா மாக ஆண்டு வராமையால் ஸமஸ்தான குடிகளும் பிரபுக்க ளும் நொந்து அவனைப் பட்டத்திலிருந்து நீக்கி நாபதி ஸமஸ்தானத்தின் ஆதிசந்ததியாகிய நரசிம்ம இராயலைச் சிங்காசன மேற்றுவித்ததாக எழுதியிருக்கிறார். விஜய நகரத்தில் மறுபடியும் நரபதி ஸமஸ்தான ஸ்தாபனம். இப்படி விஜயநகரம் மறுபடியும் நரபதி சமஸ்தான மாகி நாசராயலு ஆண்டுவா ஆரம்பிக்கையில், ஸமஸ்தான குடிகளும் பிரபுக்களும் சுதந்தா சுக வாழ்வைப் பெற்றார் கள். பிறகு பிரார் நாட்டு அரசனாகிய காஜாகவான் சாயிபு இறந்துவிட, 1487-ம் வருஷம் ஈசுப் ஆதல் ஷாப் பட்டத்து ற்கு வர, அந்நாடெங்கும் கலகங்களாகி அல்லோலகல்லோல் மாகியது. அதே மாதிரியாகவே அஹமத் நகரம், பீரார், பெக்னூர், கோல்கொண்டா முதலான விடங்களிலும் கல கங்களுண்டாகப் பாமினி ராஜ்யம் பாழடைந்து வந்தது, தென் தேசத்தின் ஸ்திதி இப்படியிருக்க, வடக்கே பேபர் என்பவன் படை எடுத்து வந்து டில்லியைப் பிடித்து மோ கல்ராஜ்யத்தை ஸ்தாபித்தும், இந்தியாவிலுள்ள மகமதிய சிற்றரசர்களுக்கெல்லாம் உதவிபுரியச் சிந்தமாக இருப்ப தாகவும் சங்கதி அறிவித்தான். அப்போது ஐரோப்பாகண் டத்தைச் சார்ந்த போர்த்து கல்லிலிருந்து 1498 ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி வாஸ்கோடிகாமா என்பவன் மலையாளக்கரையிலிறங்கி வர்த்தகம் செய்ய ஆரம்பித்தான், இப்படிப்பட்ட நவீன சம்பவங்கள் நடக்குங்காலத்தில் அது சாக்ஷி செய்ய ஆரம்பித்த நாசராயலின் ஸ்திதி எப்படி இருக்கவேண்டும்?