பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். [2-ம்

நரபதி நரசராயலு ளமஷ்தானம். (கி.பி. 1490y முதல் 1497u வரை.) PEes அப்படித் தமது பிதுரார்ச்சித ஸமஸ்தானத்தைக் குடிக் ளுடைய வேண்டுகோளின்படி அடைந்த நரசராயலு சக் திரவமிச க்ஷத்திரிய ஆந்திரர். அவர் வீட்டின் பெயர் கோட்டவாரு. அதாவது, அவருடைய ஆதி தாய் தந்தையர் கள் மகதநாடு அல்லது புஷ் புரி கோட்டையிலிருந்து வந்தவர்களானபடியால், அவர்கள் வீட்டின் பெயர் கோட்ட வாரு என்றாகியது. மத்திய காலத்தில் கால வித்தியாசத்தி னால் தமது தாய் தந்தையர்கள் துளுவநாட்டில் ஆண்டு வந்த தைப்பற்றித் துளுவவாரு என்று சில சரித்திரக்காரர்கள் வழங்கிவருகிறார்கள். இதற்குமுன் விஜயநகரம் ஆண்ட புக்கராயலு முதலானவர்கள் சைவர்களாக இருந்தார்கள். நாபதி நாசராயலு குடும்பத்தார் ஆதியில் புத்தர்களாகவும், பிறகு சைவர்களாகவும் இருந்து, பிறகு வைஷ்ணவர்களாகி விட்டார்கள். அப்படியாகினும், சகல மதஸ்தர்களிடத்திலும் சமரச மரியாதை யடையவர்களாக இருந்தார்கள். அவ ருடைய மந்திரி மஹா மதியூகியென்று பிரபலப் பெயர் பெற்ற சாலுவதிம்மரசு அல்லது அப்பாஜி என்பவர். அந்த நாசராயலுக்குத் திப்பாம்பாதேவி, நாகாம்பிகா தேவி, உமாம்பிகாதேவி என்ற மூன்று மனைவிக ளிருக் தார்கள். அவர்களில் திப்பாம்பாதேவி வயிற்றில் வீரநர சிம்மராயலும், நாகாம்பிகாதேவிக்குக் கிருஷ்ண தேவராய லும், உமாம்பிகாதேவிக்கு அச்சுததேவராயலும், அரங்க கேவராயலுமாக நான்கு குமாரர்கள் பிறந்தார்கள். வேறொரு சாசனத்தினால், ரேசராயலுக்குப் புஜபலராயலு என்ற ஜேஷ்ட குமாரன் பிறந்து 6 வருஷகாலம் ஸமஸ்தானத்தை அதிக கம்பீரமாக ஆண்டுவந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக் கிறது. மற்றொரு சாசனத்தில், வீரநரசிம்மராயலுக்கே புஜபலராயலு என்ற பெயரும் வழங்கி வந்ததாகத் தெரி விக்கப்பட்டிருக்கிறது (Vide P. 110. A Forgotten Eml nire bv Robert Sewell) அப்படிப் பிறந்த ஆண் மக்களுக்கு க்ஷத்திரிய தருமத்தின்படி சிறுவயதிலேயே கல்வி ஞானத் தையும், வில்வித்தை மல்லயுத்த முதலான பயிற்சிகளையும் போதித்து, சமஸ்தானத்துக்குத் தக்கபடி வளர்த்தார்கள்.