பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். 2-ம்

சாலுவதிம்மரசு என்னும் அப்பாஜியை மந்திரியாகக்கொண்டு அசசு செய்யவேண்டுமென்று திட்டப்படுத்தியும், இவ்வித மாக 13 வருஷங்கள் ஆண்ட பிறகு சாலிவாஹன சகாப்தம் 1401 சார்வரி நாமசம்வச்சரமாகிய கி. பி. 1498-ம் வருஷத்தில் பரமபதமடைந்தார். வீர நரசிம்மராயலு ஸமஸ்தானம். (கி. பி. 1497ளு முதல் 1508u வரை.) அந்த நரசராயலுக்குப் பிறகு அவர் ஜேஷ்ட குமாரர் வீரநரசிம்மராயலு சாலிவாகன சகாப்தம் 1410 வருஷம் (சார்வரி நாம சம்வச்சரம்) சிங்காசனம் ஏறின உடனே தமது அதிகாரத்துக்கு உட்பட்ட அநேக பெருகில் குருதில மன்னர்களிடம் கப்பம் வாங்கி வந்தாலும், மைசூர் ஸமஸ்தா னத்தாரும், கர்னாடகத்தைச் சார்ந்த உம்மத்தூர் - தலை நாடு முதலான விடங்களிலுள்ள பாளையக்காரர்களும், கப் பங் கட்டமாட்டோமென்று கர்வத்தைக் காட்டியதனால், அந்நாடுகளுக்குத் தமது தம்பிமார்களாகிய கிருஷ்ணதேவ ராயலையும், அச்சு ததேவராயலையும் தகுந்த சேனையோடு அனுப்பி அவர்கள் கொட்டத்தை அடக்கிக் கப்பம் வாங்கிக் கொண்டு வாழ்ந்து வருகையில், 1498லும் போர்த்துகல் தேசத்து 'வாஸ்கோடிகாமா'வின் கப்பல் கார்வார்' கசை க்கு வந்தது. 1503 போர்த்துக்கேசியர் ஹானிவர் கோட்டையைத் தாக்க அந்நகரத்தை நெருப்புக்கிசையாக்கி விட்டார். பிறகு அவர்கள் பட்கல்ம என்னும் இடத்திற்குப் போய்த் தாக்கி ராயலு அனுமதியினால் 1505 அஞ்ஜ் டிவ் (Anjdiv) என்ற விடத்தில் கோட்டையைக் கட்டிக் கொண்டார்கள். அந்தப் போர்த்து கேசியருக்கு (Alneyda) அல்மெடியா என்பவர் பிரதிநிதியாக இருந்தார். அந்தப் பிரதிநிதிக்கு நரசிம்மராயலு ஒரு தானாதிபதியை யனுப் பிச் சமாதானம் செய்துகொண்டார். அந்தக்காலத்தில் இடாலியா யாத்திரைக்காரராகிய (Varthema) 'வர்த்திமா' என்பவர் கனாாவையும், விழயாக எத்தையும் வந்து நேரில் பார்த்துப் புகழ்ந்து எழுதியிருக் கிறார். அதாவது: விஜயநகரம் அப்போது பூலோகத்தில் ஓர் விசித்திர பட்டினமென்றும், அதை ஆண்ட நாசிம்ம தேவராயலு கோடீசுவர ரென்றும், அவருக்கு வருஷம்