பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். 2-ம் నిఖిల భువన ప్రపూర్ణ స్నద్ర కీర్తి | సధికులయిరి తదీయాస్వరమున లుట్టి " అని. அப்படி அந்தக் கிருஷ்ணதேவராயலு பிறந்த உடனே இராயனுக்கு அநேக நல்ல சகுனங்களுண்டாகிச் சந்தோ ஷத்தை விருத்தியாக்கிய துடன், பீஜப்பூர் ஸமஸ்தானம் முழுறும் இராயலுக்குச் சொந்தமாகியபடியால், காசரா யலு மகிழ்ந்து, அந்தக் கிருஷ்ணராயலு மஹா அதிர்ஷ்ட சாலியாவானெனக்கொண்டு, நாளொருவண்ணமும் பொழு தொரு மேனியுமாக வளர்த்துவந்தாராம். இதையறிந்த அந்த சாயலுடைய மற்ற மனைவிகள் இனி இந்தக் கிருஷ்ணராயலு உயிருடனிருந்தால், தம் மக்களுக்குச் சிங்காசனம் இட்டாதென்றஞ்சி, அம்மகவை அரண்மனைக் குள்ளாகவே கொன்றுவிட வேண்டுமென்று இயகசியமாகக் கொலைப் பாதகனைத் தூண்டி வந்தார்களாம். அந்தச் சூதையறிந்த சாலுவ திம்மரசு என்னும் மந்திரி, அக்கொலைபாதகரைத் தம்வசப்படுத்தியும், அவர்கள் வச த்திலிருந்த கிருஷ்ணதேவராயலு என்னும் பிள்ளையைத் தாம் பெற்றுக்கொண்டும், அப்பிள்ளைக்குப் பதில் ஒரு பக்ஷியைக் கொடுத்துக் கொல்லச்செய்து அதன் இரத்தத் தை இராஜம ஹிஷிகளுக்குக் காட்டும்படி செய்து திருப்தி யாக்கிவிட்டும், கிருஷ்ணராயலு என்னும் சிசுவைத் தன் வீட்டிற்குக் கொண்டுவந்து போஷித்துப் பாதுகாத்தும், பலகலைகளையும் போதித்துவர, அந்தப் பாலியனான கிருஷ் ணதேவராயலு, சாலுவதிம்மரசுதான் தனது பிதாவென் அம், அவரை, அப்பாஜி' என்றும் அழைத்துவர், அந்த மந் திரிக்கு அன்று முதல் " அப்பாஜி" என்கிற பெயரே அதிக பிரபலமாகி விட்டதாம். அந்த அப்பாஜியும் அந்தக் கிரு ஷ்ணதேவராயலை அதிக காருணியத்தோடும், கருத்தோ இம் வளர்த்து வந்தாராம். அப்படிக் கிருஷ்ணதேவராயலு தம் மந்திரி வீட்டில் வளர்த்துவா, அரண்மனையிலிருந்த தந்தையாகிய சாச சாயலுக்கு இச் சங்கதிகளை அறிவிக்காமல், கிருஷ்ண ராயலு என்னும் சிசு மாந்தத்தினால் இறந்து விட்டது என்று பெண்டுகள் கூடிப் பெரும் பொய்யைச் சொல்ல, அந்த அரசனும் அது உண்மை என்று நம்பி, அன்று முதல் கல்ல ஆகாசமும் நித்திரை முதலானவைகளு மற்று