பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம் தெலுங்குநாடு. 183 மையாலும், மற்ற மனைவிகளும் மக்களும் நரசராயலுடைய இராஜசி கொசனம் தம்மக்களுக்கும் தமக்கும் கிட்டாதென் றஞ்சி, பொறாமைப் பேப்பிடித்து அவரைக் கொல்லவும், ஜாதிப்பிரஷ்டனாக்கவும், தாசி புத்திரன் என்று அநியாய மான அவது களைச் செய்தார்கள். ஆகவே, அந்தப் பொய்க் கதைகளை நம்பவேண்டாம், கிருஷ்ணதேவராயலு தாசி புத்திரராக இருந்தால், அப்படிப்பட்டவருக்கு எனது குல மணியைக் கொடுக்கச் சம்மதிப்பேனா? அந்தக் கிருஷ்ண தேவசாயலு பிறந்தநாள் முதல் நாளதுவரையில் நடந்த அவரது ஜாதகத்தைப் பார்த்துத் தான் வாக்குத்தத்தம் செய்தேன்" என்று பலவிதமாகப் புத்திமதிகளைச் சொல்லிச் சமாதானப்படுத்தியும், தம் பத்தினிமார்களையும், புத்திரியை யும் தக்கபடி அலங்காரம் செய்து கொண்டிருங்கள் என்று திட்டம் செய்தும், தமது பந்து மித்திரர்களையும், பிராம் மண சிரேஷ்டர்களையும், சமஸ்தான பெரிய உத்தியோகள் தர்களையும் சகல வாத்திய கோஷங்களுடன் கோட்டைக்கு வெளியில் அனுப்பி, அங்கு வந்து தங்கியிருக்கும் திம்மாசு மந்திரிக்குத் தக்க மரியாகைகளைச் செய்தும், அவர் கூட வெற்றிலைப்பாக்கு மடித்துக்கொடுக்கும் வேஷதாரியான கிருஷ்ணதேவராயலையும், மற்ற உத்தியோகஸ்தர்களையும் கோட்டைக்குள் அழைத்துவந்தும், அரண்மனைக்குள் அல ங்கரித்து வைத்திருந்த சபாமண்டபத்தில் உட்காரச்செய்து உபசரித்தும், கிருஷ்ண தேவராயலுடைய க்ஷேமத்தையும், அவர் சமஸ்தான க்ஷேமத்தையும் விசாரித்து விவாக முகூர்த்தகாலம் வரவே, வேதப் பிராம்மணர்கள் வேதகிதன் களைப்பாட கிச்சய தாம்பூலத்துக்கு ஆரம்பித்தார்கள். உடனே முகூர்த்தகாலம் கிட்டிவர, புரோகிதர்கள் மந்திரங்களைச் சொல்லி ஆசீர்வதிக்க, க்ஷத்திரிய தருமத் தின்படி கிருஷ்ணதேவராயலு அனுப்பிய ஆடை ஆபாணம் களையும், பண்டு பலா திகளையும், வெற்றிலைப் பாக்கு புஷ்ப சந்தன குங்குமாதிகளையும், மணமகளுக்குக் கொடுக்க, கஜபதிராயலு திம்மரசு மந்திரியை அந்த வரிசைகளுடன் அந்தப்புரத்துக்கு வரும்படி அழைத்துப்போக, அந்தக் திம்மாசும் தன்னுடன் வெற்றிலைப்பாக்கு மடிக்கும் வேஷக் காரனாக வந்திருக்கும் கிருஷ்ணதேவராயலையும் சுஜபதி யின் உத்திரவின்படி அந்தப்பாத்துக்குள் அழைத்துக் கொண்டுபோய், தங்கத் தட்டுகளில் அநேக ஆடை ஆபா