பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம் ணங்களையும், முத்துகள் கோர்த்த தட்டுக்களில் மல்லிகை முல்லை முதலான புஷ்பங்களையும், வைரமணிகள் பதிந்த தட்டுக்களில் வெற்றிலைப்பாக்கு சந்தன குங்குமாதிகளையும், அவைகளின் மேல் வைர வைடூரிய வாகனங்கள் பதிந்த கட்டாரியையும், அடுக்கடுக்காக அடுக்கச் செய்வித்து, அவைகளை வெற்றிலைப் பாக்கு மடிக்கும் வேஷதாரியை எடுத்துக்கொண்டுபோய்த் திரைக்குள் சகல ஆடை ஆபர ணங்களால் அலங்கரித்துக்கொண்டு தேவலோக அப்சன் ஸ்திரீயைப் போல் இருந்த கஜபதி குமாரத்தியினிடம் கொடுக்கும்படி உத்தரவு செய்ய, அதைக்கேட்டு கஜபதி ராஜகன்னிகையும் கிரையை நீக்கிக்கொண்டு தக்க தாதி மார்களுடன் திசைக்கு வெளியில் சற்றுவந்து நிற்க, வெற் றிலைப்பாக்குக் கொடுக்கும் வேஷதாரியும், திம்மாசு வார்த் தைக்கு மிக்க பயந்தவனைப்போல் பாசாங்கு காட்டியும், அடக்க ஒடுக்கமாக அந்தத் தங்கத் தட்டுகளையும், முத்து மணி வைரமணி கட்டாரி தட்டுகளையும் ஏந்திக்கொண்டு போய்க் கஜபதி கன்னிகையின் முகாரவிந்தத்தை ஜாடை யாக ஏறிட்டுப்பார்த்தும், அவள் அழகின் பெருமையைக் கண்டு தனக்குள் தான் சந்தோஷித்தும், இருகைகளாலும் எடுத்துக்கொடுக்க, அந்தக் கஜபதி புத்திரியும், அந்த வெற் றிலை வேஷதாரியின் முகார விந்தத்தையும், காலில் அணிந் திருந்த வஜ்ஜிரவீர சங்கிலியையும், கையி லணிந்திருந்த வஜ்ஜிரகண்டி முதலானவைகளையும் பார்த்துப் பிரமித்து, இந்த வேஷதாரியே கிருஷ்ணதேவராயலென்று தீர்மானி த்துப் பெருமூச்சு விட்டுக் கேவலம் ஸ்திரீஜா தியான தன் அந்தஸ்தையும், பெருமையையும் மறைத்து வேலைக்காரன் வேடம் பூண்டு வந்ததைச் சிந்தித்தவளைப் போல முகத் தைக் காட்டி நின்றான். உடனே பதில் தாம்பூல மரியாதையாகக் கிருஷ்ண தேவராயலுக்குக் கஜபதிராயலு தயார் செய்து வைத்திருந்த தங்கத் தட்டு தாம்பூலா திகளை அந்தக் கன்னிகையின் கை யில் கொடுத்து, வெற்றிலைப்பாக்கு மடிக்கும் வேஷதாரி வேலைக்காரனிடம் கொடுக்கும்படி சொல்ல, அந்தக் கன் னிகையும் மனமுவந்து தனது ஆசை நாயகனாகிய வேஷ் தாரியின் முக அழகை மறுபடியும் பார்த்தும், இரண்டு கைகளால் எந்திக் கொடுக்க, அவ்வேஷதாரியும் அடக்க ஒடுக்கமாக வாங்கித் திம்மாசுக்கு அருகில் வந்து வைக்க,