பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு. 185 அந்தத் திம்மாசும், கஜபதியும் அவர் பத்து மித்திரர்களும் சந்தன புஷ்பங்களைத் தரித்துக்கொண்டும், உல்லாசமாக இரண்டு ஸ்மஸ் தானங்களின் சங்கதிகளைப் பேசிக்கொண்டு மிருக்க, திரைக்குள் போன இராஜகன்னிகையை அவ ளுடைய தாயார் முதலான இராஜமஹிஷிகள் வந்து சூழ்ந்து கொண்டு "திரைக்கு வெளியில் நடத்த விருத்தாத்தங்கள் என்ன?" என்று கேட்க, அந்தக் கன்னிகையும், கண்களில் ஆருந்த பாஷ்பம் பெருக, கரங்கள் நடுங்க, தனது தாயா ரைப் பார்த்து, "எனது ஆருயிராகிய அன்னையே! நான் திரைக்கு வெளியில் போய் வெற்றிலை மடிக்கும் வேலைக் காரனிடம் தாம்பூல மரியாதை வரிசைகள் வாங்கியது முதல், அந்த வேலைக்காரனே என் முன் வந்து, இப்போ தும் சாயாரூபமாக நிற்கின்றான். பசும் பொன் நிறமும், பதி னெட்டு வயதும், ஆஜானுபா ஹனும், வில்லுகளைப் போல் வளந்த புருவங்களும், செந்தாமரையைப் போன்ற பெரு த்த கண்களும், விசாலமான காதுகளும், நீண்ட மூக்கும், பவளத்தைப் போன்ற உதடுகளும், முத்து வரிசையைப் போன்ற பற்களும், அரும்பு துளிர் போல் ஆரம்பிக்கு மீசை யும், பூரண சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகமும், தக்க காசாணதிகளும் பொருந்தியிருப்பவனும், காலில் வஜ்ஜிர வீரசங்கிலியையும் தரித்து, வெகு கம்பீரமாக வந்த அந்த வேலைக்காரன் எவனோ? அறிகிலேன்! அவனைப் பார்த்தது முதல் எனக்குத் தசாவஸ்தையும் சம்பவித்தது போலிருக் இறது. அவன் இப்போதும் திரைக்கு வெளியில் தான் நமது அப்பாவுக்கு அருகில் கைகட்டிக்கொண்டு நிற்கிறான், பாருங்கள் என்று சொன்னாள். இராஜமஹிஷிகளும் மற்ற அந்தப்புர மாதுசிரோன் மணிகளும் உடனே கொஞ்சமாகத் திரையை நீக்கிப் பார்க் கையில், அந்த வாலிப வேலைக்காரனுடைய லக்ஷணங்கள் எல்லாம் தாம் முன் பலரால் கேட்டிருந்தபடி கிருஷ்ண தேவராய னுடைய லக்ஷணங்களாகவே இருக்கின்றன என்றும், " அந்தக் கிருஷ்ணதேவராயலு இப்போது வேஷ் மிட்டு வந்கிருக்கிறான்' என்றும், அவன் அவ்வளவு அழகு வாய்ந்தவனாகவும், இராஜாதிராஜனாக இருக்கினும் தாகி புத்திரன் தான் என்றும், " அவனை இன்று இராத்திரி யில் படுத்துத் தூங்கும் போது எப்படியாவது கொன்றுவிட் டால் நமது இராஜகுமாரத்தியை வேறு நல்ல ஜாதியானுக்