பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 பாகம்) தெலுங்குநாடு, அப்போது தனியாகப் போய்ப் படுக்கலாம்" என்றும் சொல் லித் திட்டம் செய்து விட்டும், திம்மரசும் கிருஷ்ணதேவ சாயலும் இராப்போஜனம் செய்து முடித்துக்கொண்டு சோபனப்படுக்கை வீட்டிற்குள் போய்த் தங்கக்கட்டிலின் அடியில் பதுங்கிப் படுத்துக்கொண்டிருக்க, பன்னிரண்டு மணியாகவே தாதிகள் இராஜகுமாரியை அழைத்துவந்து படுக்கைவீட்டிற்குள் விட்டுவிட்டுக் கதவை மூடிக்கொண்டு போக, இராஜ குமாரி தாய் வார்த்தைக்குக் கட்டுப்பாட்டுக் கட்டாரியைக் கையிலேந்திக் கட்டிலின் மீதிருக்கும் கிரு ஷ்ணதேவராயலு சிலையின் வயிற்றில் குத்திக் கிழிக்க, அதினுள் நிறைந்திருக்க தேன் பீறிக்கொண்டுவந்து இராஜ கன்னிகையின் முகத்திலும் உதடு முதலான விடங்களி லும் விழ, இராஜகுமாரியின் உதட்டில் விழுந்த தேன் துளியை அவள் சுவைத்துப்பார்க்க, அது அதிக மதுரமாக இருக்க, "அந்தோ ! அந்தோ !!! இந்தக் கிருஷ்ணதேவராய லுடைய இரத்தங்கூட அவர் குணங்களைப்போலவே ருசியா யிருக்க இப்படிப்பட்ட மஹானுபாவனை முடமதியுள்ள தாரார் உத்தரவுப்படிக் கொன்றோமே; இப்பாவத்துக் கென்ன செய்வோம்" என்று துக்கித் தழ, இவ்விஷயங்களைக் கேட்டிருந்த திம்மாசு மந்திரி திடீரென்று கட்டிலின் கீழிருந்து வந்து இராஜகன்னிகையைப் பார்த்துக்கும்பிட்டு, "என் தாயே தயங்காதே! இஃது உன் குற்றமன்று; உன் தாயாரும் மற்ற மூட ஸ்திரீகளும் செய்வித்த குற்றம்; நீ என் செய்வாய்? நீ கிருஷ்ணதேவராயலைக் கொல்லுவதில்லை என்று இந்தக் கட்டாரியைத் தலை மீது வைத்துச் சத்தியம் செய்து கொடுப்பாயாகில் உடனே கிருஷ்ண கேவராயவை எழுப்பித்தருவேன்' என, அந்தராஜகன்னிகையும் இசை ந்து கட்டாரியைத் தலைமீது வைத்துச் சத்தியம் செய்து கொடுக்க, உடனே கட்டிலின் கீழ்ப் பதுங்கியிருந்த கிரு ஷ்ணதேவராயலு வந்து திம்மாசின் தந்திரத்திற்கு மெச்சி அந்த இராஜகுமாரியைத் தமது தர்மபத்தினியாக அங்க கரித்து ஆனந்தமடைந்தார். (ஆக இந்தக் கிருஷ்ணதேவராயலுடைய இரண்டு விவா ஹத்தைப்பற்றிய மேற்கண்ட கதைகள் இப்போது அந்தச் சமஸ்தானத்தின் சந்ததியும், ஆன குந்தியிவிருக் கும் ஸ்ரீமந்த ஸ்ரீரங்கதேவராயலு ராவ்சாஹிபவர்கள் சென்ற வருஷம் நீலகிரி மலைக்கு மாக்ஷிமையுள்ள சென்னைக்